சுவையான செய்திகள்
திருக்குறளின் பெருமை
ஜெர்மனி நாட்டின் தத்துவ மேதையாகத் திகழ்ந்தவர் ஆல்பர்ட் சுவைட்சர். தத்துவம், இசையில் டாக்டர் பட்டம் பெற்றதோடு, மருத்துவத்திலும் டாக்டர் பட்டம் பெற்றவர்.
ஆப்ரிக்க நாட்டு ஆதிவாசிகளுக்குப் பரவியிருந்த தொழுநோயோடு போராடி, அந்த நாட்டை விட்டே தொழுநோயை விரட்டியதற்காக சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்(1952).
பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறளைப் படித்து முடித்து, திருக்குறளுக்கு இணையான அறநெறி நூல் உலகில் எங்கும் காணக் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார்.
உலகமே புத்தகம்
ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் என்னும் நாவல் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.
இந்த நூலுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான டாக்டர் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட கார்க்கி, வெளியே வந்தபோது நிருபர் ஒருவர், எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றீர்கள் என்று கேட்டார்.
நான் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகமாகத் தோன்றினார்கள். அவர்களைத்தான் படித்தேன் என்றார்.
சிந்தித்துச் செயல்படுங்கள்
புதுவையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதோ பின்னால் பாருங்கள் என்றார். கூட்டத் திலிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கு எந்தக் காட்சியும் தென்படவில்லை.
உடனே புரட்சிக்கவிஞர், இப்படி யார் எதைச் சொன்னாலும் அவர் சொற்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். நன்மையா, தீமையா, லாபமா, நட்டமா என்று சிந்திப்பதே இல்லை. ஏமாளியாக இருக்காமல் சிந்தித்துச் செயல்படுங்கள் என்றார்.
சாதுரியப் பேச்சு
அமெரிக்காவில் 1961ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிக்சனும், ஜான் எப். கென்னடியும் போட்டி யிட்டனர். பொதுக் கூட்டத்தில் பேசிய நிக்சன், கென்னடி நம்பிக்கைக்கு ரியவர் அல்லர்; அவர் மகா பொய்யர் என்று பேசினார்.
இதனைக் கேட்ட கென்னடி, நண்பர் நிக்சன் என்னை ஒரு பொய்யர் என்று குறிப்பிட்டுப் பேசி னார். நான் பொய்யன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது இந்தக் கூட்டத் தில் நான் பேசுபவை பொய் என்றால் தைரியமாகக் கூறுங்கள். இப்போது நான் சொல்கிறேன், இந்தக் கூட்டத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் சிறந்த அறிவாளிகள்; அதேபோல் இங்கே கூடியிருக்கும் பெண்கள் அனைவரும் சிறந்த அழகுடையவர்கள் என்று. நான் சொன்னது பொய்யெனில் இப்போதே தைரியமாக மறுத்துக் கூறுங்கள் என்று சாதுரியமாகப் பேசினார். கூட்டத்திலிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர். தேர்தலில் வெற்றிபெற்று, குறைந்த வயதிலேயே குடியரசுத் தலைவரானவர் என்ற பெருமையையும் பெற்றார் கென்னடி.
வெற்றிக்கு அடித்தளம்
அமெரிக்காவைக் கைப்பற்ற இங்கிலாந்துப் படைகள் ஆற்றின் கரையில் முகாமிட்டிருந்தன. விடுதலைக்காகப் போராடும் அமெரிக்கப் படைகள் படைத்தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் எதிர்க்கரையில் அணி வகுத் திருந்தன. வெறும் சுதந்திர உணர்ச்சியை மட்டுமே நம்பியிருந்தனர் அமெரிக்கக் குடிமக் கள் படையினர். மறுநாள் காலையில் ஆற்றில் இறங்கி இங்கிலாந்துப் படைகள் கடந்தால் அமெ ரிக்கா வீழ்ந்துவிடும் என்ற சூழ்நிலையில், இரவு நேரத்தில் விழித்துக் கொண்டே தீவிர யோசனை செய்தார் வாஷிங்டன். குளிரோ வாட்டியது. அந்தக் குளிரே வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்தது. குளிரில் ஆற்றுநீர் உறைந்து பனிக் கட்டியானது. சூழ்நிலையைச் சாதகமாகப் பயன் படுத்த நினைத்த படைத்தளபதி, தன் படைகளை எழுப்பினார். அவசரப்படாமல் மெதுவாக ஆற்றினைக் கடக்கச் செய்தார். தூங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்துப் படையினர்மீது அதிரடித் தாக்குதல் நடத்தச் செய்தார். இங்கிலாந்துப் படைகள் நிலைகுலைந்தன. அமெரிக்கப் படைகள் வெற்றிபெற்றன. அமெரிக்க நாட்டின் சுதந்திரம் மலர்ந்தது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவரானார் ஜார்ஜ் வாஷிங்டன் (1789-_1797).
– தொகுப்பு : மேகா