கவிதை
தலைமைத் தொண்டர் வீரமணி
பத்தாம் அகவைப் பொழிவினராம்
பகடும் கடலூர் பிறந்தவராம்
புத்தம் புதிய போரினராம்
போற்றும் பெரியார் படையினராம்
வன்முறை விரும்பா வழியினராம்
வகுப்பு வாரி விரும்பினராம்
பன்முறை சிறைக்குப் போனவராம்
பட்டறி வாழ்வியல் படைப்பினராம்
ஓடா மடமை உடைப்பவராம்
ஓயாக் கதிர்போல் உழைப்பவராம்
வாடா மலர்போல் வாழ்பவராம்
வீர மணி-_அவர் வெல்பெயராம்
தாழ்த்தும் எதிரியைத் தகர்ப்பவராம்
தலைமைத் தொண்டுத் தளபதியாம்
வாழ்த்தி நாமும் வணங்கிடுவோம்
வளரும் தமிழ்போல் வாழியவே!
(அகவை: வயது, பொழிவு: பேச்சு, வாழ்வியல்: நடைமுறை, படைப்பு: எழுத்து)
குறளன்பன், திருச்சி
தாமதம் வேண்டாம்
வாருங்கள்
மதத்தைக் கடந்து
வேண்டாம் வேண்டாம்
மதத்தை மறந்து வாருங்கள்
மனித நேயப் பள்ளியில் சேர்வோம்
அங்கு ஒற்றுமை எனும் நிலத்தில்
அன்பு என்னும்
விதை விதைத்து
மனித நேயம் எனும் தண்ணீர் விட்டு
ஜாதி எனும் சதியை வேரறுத்து
அமைதிப் பயிர் வளர்ப்போம்.
– ப.நாகராஜன், மாராச்சேரி