உலக நாடுகள் – சுவாசிலாந்து
தென்கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு. நான்குபுறமும் நிலத்தால் சூழப்பட்டது.
தலைநகர்: பாபேன் (Mbabane)
மொழி : ஆங்கிலம், ஸ்வாதி
ராஜவம்சம் முழுமையாக நிலவியிருக்கும் வெகுசில நாடுகளுள் ஒன்று. பிரிட்டனிடமிருந்து 1968 செப்டம்பர் 6 அன்று சுதந்திரம் பெற்றுள்ளது.
மன்னர்: மூன்றாம் ஸ்வாதி (Mswati III)
பிரதமர்: பர்னபாஸ் சிபுசிசோ லாமினி (Barnabas Sibusiso Dlamini)
துணைப் பிரதமர்: தெம்பா என் மசுகு(Themba N Masuku)
சுவாசிலாந்து அரசு 200 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்காலத்தில் நிறுவப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது. கி.மு. 25,000 ஆண்டுகளுக்கு முந்தைய மற்றும் 19ஆம் நூற்றாண்டுவரையான பாறை கலை ஓவியங்கள் காணப்படுகின்றன.
Khoisan Hunter gathers என்றழைக்கப்பட்ட மக்களில் பெரும்பாலோர் பாண்டு (Bantu) பழங்குடியினர், பாண்டு குடியேற்றத்தின் போது கிழக்கு ஆப்ரிக்காவின் கிரேட் லேக்ஸ் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
15ஆம் நூற்றாண்டில் லிம்போபோ (Limpopo) ஆற்றின் குறுக்கே கடந்த பாண்டு மக்கள் தங்களுக்குத் தெரிந்த இரும்புத் தொழில், விவசாயத்தை ஆரம்பித்து ஒரு காலனி உருவாக்கினர். தெற்கிலிருந்து Ndwandwe வாரிசுகளால் போட்டியும் பொருளாதாரத் தாக்கமும் ஏற்பட்டது.
பின்னாளில் அரசாட்சி புரிந்த மன்னர் முதலாம் ஸ்வாதி (விஷ்ணீவீ மி) என்பவரின் பெயரால் சுவாசிலாந்து என்ற பெயர் பெற்றது. மேலும், ராயல் ஹவுஸ் ஞிறீணீனீவீஸீவீ என்ற குடும்பப் பெயரால் அழைக்கப்பட்டது.
19, 20ஆம் நூற்றாண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நிலவிய பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் ஆளப்பட்டது. 1891இல் பிரிட்டிஷ் அரசு சுவாசிலாந்தின் சுதந்திரத்திற்குக் கையெழுத்திட்டது. எனினும், கனிம வளம் மற்றும் உரிமைகளைத் தென் ஆப்ரிக்கா எடுத்துக்கொண்டது. எனவே சுவாசிலாந்து இரண்டாம் போயர் போரில் (Boer War 1899-1902) ஈடுபட்டது.
நாட்டின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட சட்டமன்ற, நிர்வாகக் குழுக்களை தேசிய குழுவினர் எதிர்த்தனர். எனினும், முதல் சட்டக் கவுன்சில் 1964 செப்டம்பர் 9இல் அமைக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் பிரிட்டனால் ஏற்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
முழுமையான அதிகாரம் மன்னரிடமே உள்ளது. சட்டசபையிலிருந்து மன்னரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். மேலும் அறிவுரைக் குழுவின் உதவியால் இரு அவைகளுக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் மன்னரால் நியமிக்கப்படுகிறார்கள். சுவாசிலாந்து நாடு நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் டின்குலாண்டா என்ற பெயரால் 55 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவுகளிலிருந்து House of Assemblyக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
புவியியல் அமைப்பு:
லெசோதா மலைத்தொடர், ஜிம்பாப்வே, கென்யா, ஆப்பிரிக்கா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. வடகிழக்கில் மழைக் காடுகள் சூழ்ந்துள்ளன. நாடு முழுதும் பல நதிகள் ஓடுகின்றன.
அவற்றில் முக்கியமானது கிரேட் உஸ்தூ நதி. இது கால்நடைப் பண்ணைகள் உள்ள நாடு. மேன்சினி என்பதே முதன்மையான வணிக மற்றும் தொழில் நகரமாகும்.
தட்பவெப்பம்: மழைக்காலம் – செப்டம்பர் முதல் அக்டோபர் வரை. கோடைக்காலம் நவம்பர் முதல் மார்ச் வரை. இலையுதிர்க்காலம் ஏப்ரல் முதல் மே வரை. குளிர்காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை.
சுற்றுலாத் தலங்கள்:
புஷ்மேன் பெயிண்டிங்ஸ் (Bushman Paintings), கேம் ரிசர்வ்ஸ் (Game Reserves), மகுகா அணை (Maguga Dam), மான்டெங்கா கைத்தொழில் மய்யம் (Mantenga Craft Centre), அருங்காட்சியகங்கள் (Museums), கிவேனே கிளாஸ் (Ngwenye Glass), போபோன்யனே அருவி(Phophonyane Falls), ஸ்வாசி கேன்டில்ஸ் (Zwazi Candles).