விடுகதை
1. என்னோடு இருக்கும் சிறுமணி எனக்குத் தெரியாது. ஆனால் உனக்குத் தெரியும். அது என்ன?
2. கருப்பாக இருக்கும் வரை கம்பீரம் இவனுக்கு. அது என்ன?
3. விழுந்தால் படுக்காது. எழுந்தால் நிற்காது. அது என்ன?
4. பதுங்கி வருவார் கள்வர் அல்ல, பாய்ந்து பிடிப்பார் போலீஸ் அல்ல. அது என்ன?
5. மட்டையுண்டு கட்டையில்லை, பூவுண்டு மணமில்லை. அது என்ன?
6. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்குது பூ. அது என்ன?
7. ஆற்றைக் கடக்கும், அக்கரை போகும், தண்ணீரில் கலக்காது, தானும் நடக்காது. அது என்ன?
8. மூன்றெழுத்துக் கொண்டது; ஒரு பெண்ணின் பெயர். அதன் முதலெழுத்தை நீக்கினால் ஒரு பூவின் பெயர். அது என்ன?
9. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும். அது என்ன?
10. தலையை வெட்ட வெட்ட கருப்பு நாக்கை நீட்டுகிறான். அது என்ன?