தகவல் களஞ்சியம்
அலைகள்
கடலில் அலைகள் தோன்றுவதைப் போலவே ஏரிகளிலும், குளங்களிலும், கிணறுகளிலும் அலைகள் ஏற்படுவதுண்டு. ஆனால், இவற்றில் காணப்படும் அலைகள் வேகம் குறைந்த சிற்றலைகளாக, சக்தி குறைந்தவைகளாக இருக்கும். நீரின் கொள்ளளவிற்கும் பரப்பளவிற்கும் ஏற்பவே அலைகளின் வேகமும் சக்தியும் அமைகின்றன.
காற்று வேகமாக வீசும்போதும், புயலின் போதும் அலைகள் உயரமாக ஏற்படும். அலைகள் உருவாக, காற்றைவிட வேறு சில காரணங்களும் உள்ளன.
வானில் உள்ள சூரியனும் சந்திரனும் பூமியைத் தம்பால் ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே அலைகள் உருவாகக் காரணமா கின்றது. பவுர்ணமி, அமாவாசை நாள்களில் கடலில் பேரலைகள் ஏற்பட்டு கடல் கொந்தளிப்பு உண்டாகும்.
இதற்குக் காரணம், பவுர்ணமி, அமாவாசை நாள்களில் சூரியனின் ஈர்ப்பு விசையும் சந்திரனின் ஈர்ப்பு விசையும் ஒரே நேரத்தில் அமைவதால் அலைகளும் பெருமளவில் தோன்றுகின்றன. இந்த நாள்களில் தென்னை மர உயரத்திற்குக்கூட கடல் அலைகள் எழும்புவது உண்டு.
நில அதிர்ச்சி உண்டாகும்போதும், பூகம்பம் ஏற்படும் போதும், கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடிக்கும்போதும் கடல் கொந்தளிப்பு ஏற்படும். அப்போது, கடல் அலைகளின் எழுச்சியும் அதிகமாக இருக்-கும்.
கடல் அலைகளைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் அறிவியல் நுட்பம் கண்டறியப் பட்டுள்ளது.
உயரமான ஏரி
தென் அமெரிக்காவின் ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள டிட்டிகா ஏரிதான் உலகத்திலேயே மிக உயரமான ஏரியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
பெரு நாட்டில் ஏரியின் பெரும்பகுதியும் பொலிவியா நாட்டில் ஏரியின் சிறிய பகுதியும் அமைந்துள்ளன. 220.8 கிலோ மீட்டர் நீளமும் 110.4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டு திகழ்கிறது. பல ஆறுகள் ஏரியில் வந்து கலக்கின்றன. டெஸ்கவுடெரா என்னும் ஆறு மட்டும் இந்த ஏரியிலிருந்து புறப்படுகிறது. மேலும், சன், மூன் போன்று பல தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைந்திருப்பதால், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருந்தும் கோடைக்காலத்தில் அமெரிக்காவில் உள்ள மற்ற எல்லா ஏரிகளையும்விட குளிர்ந்து இருக்கிறது. ஏரியின் சுற்றுப்புறச் சூழ்நிலை வறண்டே காணப்படுகிறது. இதற்கான காரணம் தெரிய வில்லை. ஏரியின் கரையோரங்களில் காணப்படும் சில மர்மமான அழிவுச் சின்னங் களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கு.மீனா, விளாத்திகுளம்
திறமை வாய்ந்தவை
வண்ணத்துப் பூச்சி, மினுக்கட்டான் பூச்சி, மின்மினிப்புழு முதலியவை தமது ஒளியைத் தாமே உண்டு பண்ணிக் கொள்கின்றன. சில வகையான வண்டுகளும், பாக்டீரியா என்னும் நுண்ணிய பூச்சிகளும்கூட ஒளிரும் சக்தியுடையவை. அவை வெளியிடும் ஒளி மிகச்சிறிய அளவுதான் என்றபோதிலும், அவை தம் சக்தியில் 2 சதவீதத்தையே ஒளிக்கென்று உபயோகிக்கின்றன என்பதை எண்ணும்போது மனிதன் பெருமை கொள்ளும் மின்சார விளக்கைவிட அவை எவ்வளவோ அதிகத் திறமை வாய்ந்தவை என்பது விளங்கும்.
மூடுபனி
மூடுபனி என்பது உண்மையில் மேகம்தான். நுண்ணிய நீர்த்துளிகளால் உருவானது. மேகங்கள் நீராவியினால் ஆனவை. மூடுபனி மேகத்திற்கும் மூடுபனிக்கும் உள்ள ஒற்றுமை மேகங்கள் மேல்நோக்கிச் செல்லக்கூடியவை. மூடுபனியோ பூமியை நோக்கி வந்து படிந்து விடக்கூடியது. போக்மிஸ்ட் என்று ஆங்கிலத் தில் கூறப்படும் இரண்டுமே மூடுபனிதான். மூடுபனி வெளுப்பாக இருக்கும் என்றுதான் நாமெல்லாம் சாதாரணமாக எண்ணுவோம். ஆனால், மூடுபனி எப்போதும் எல்லா இடங்களிலும் வெண்மையாகவும், சுத்தமாகவும் இருக்காது.
– எம்.எஸ்.மயில், சாத்தான்குளம்