ஆமா… நான் உயரம் தான்!

ஒரே மாதிரி கேள்விகளைப் பலரும் கேட்டு, ஒரே மாதிரி பதில்களைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் பல சமயம் ஏற்பட்டிருக்கும் அல்லவா? அப்படி இவர் இத்தனை பதில்களை அச்சடித்தே வைத்திருக்கிறார் என்றால், என்னென்ன கேள்விகளை எத்தனை முறை எதிர்கொணடிருப்பார்? அதுமட்டுமல்ல வழக்கத்துக்கு மாறானது என்று நாம் கருதும் ஒருவரிடம் வழக்கமான கேள்விகளைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் பாருங்கள்!