பரிசு: அறிவைத் தடுப்பதும் அறிவை விரிப்பதும்
கடந்த பெரியார் பிஞ்சு டிசம்பர்-2023 இதழில் இப்படத்தை வெளியிட்டு என்ன புரிகிறது இந்தப் படத்தில்? என்று கேட்டிருந்தோம். அதுகுறித்து ஜீவானந்தம் அவர்கள் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
1. டி.வி.யை பார்ப்பவர்
முதலில் தொலைக்காட்சிகளில் பார்ப்பவர் படுத்துக்கொண்டு டி.வியைப் பார்க்கிறார். வாழ்க்கையில் அந்தக் கோட்டிற்குப்பின் எதுவும் கிடையாது. முட்டுச் சுவர் மட்டுமே உள்ளது. டிவியைப் பார்த்தால் எதுவும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது புரிகிறது. இது ஒரு சோம்பேறியின் வேலை ஆகும். படிக்கும் பருவத்தில் படிக்காமல், பொழுதுபோக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். தொலைக்காட்சி அதில் என்ன இருக்கிறதோ அதைமட்டும் பார்க்க வைக்கிறது. நம் கற்பனைத்திறன் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. புத்தகம் படிப்பவர்
படிக்கும் பருவத்தில் படித்தால் வாழ்க்கையில் அந்தக் கோட்டிற்கு பின் உலகம் கையில் உள்ளது என்று படம் விளக்குகிறது. படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும். நகர வாழ்க்கை, விண்வெளித் துறை, உலகம் சுற்றுவது, தன் குடும்பம் உயரும், நாடு முன்னேறும் என்பதைப் படம் விளக்குகிறது. படிப்பால் எதையும் சாதிக்க முடியும், நாம் நம் கனவை நனவாக்க முடியும். வாழ்க்கையில் புத்திசாலியாக உயரமுடியும். மற்றவர்க்கு அறிவைப் பரப்ப முடியும், புதிய தொழில்நுட்பம், புதிய சிந்தனை உருவாக்க முடியும். வாழ்க்கையில் படிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை உணர முடிகிறது என்ற கருத்தைப் படம் விளக்குகிறது. படிப்பால் மட்டும் நாட்டை ஆளமுடியும். நாட்டு மக்களுக்குப் பல திட்டங்களைக் கடைகோடியில் உள்ள கிராமங்களுக்கு படித்தவர்கள் மட்டுமே கொண்டு செல்ல முடியும். படித்தவர்களுக்குச் செல்லும் இடம் எல்லாம் சிறப்பு கிடைக்கும். படிப்பு ஒருவரை அடைய முடியாத உயரத்துக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் உடையது. நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க, படிப்பு மட்டுமே உதவுகிறது. இன்று விண்வெளித் துறையில் நிலவு ஆராய்ச்சியில் சந்திரயான்-2 மற்றும் சூரிய ஆராய்ச்சியில் ஆதித்யா-1 விண்கலங்களை நிலை நிறுத்தி வெற்றியைக் கொண்டாடி இந்தியா மக்கள் பெருமை கொள்ளும் அளவிற்குப் படிப்பின் முக்கியம் உள்ளது.
பள்ளிப் படிப்பைக் கடந்தும் புத்தக வாசிப்பு அறிவின் சாளரத்தை திறந்து விடும். நம் கற்பனைத் திறனும் விரிவாகும்.
– பி. ஜீவானந்தம்,
கன்னங்குறிச்சி அஞ்சல்,
சேலம்-636 008.