துணுக்குச் சீட்டு – 14 : தைலம் எப்படி வலியைக் குறைக்குது?
நம்மளச் சுற்றி, எதுக்கு எடுத்தாலும் தைலம் தேய்க்கும் நபர்கள் நிச்சயம் இருப்பாங்க, பார்த்து இருக்கீங்களா? அவங்க வலியை ரசிக்கவே மாட்டாங்கப் பா, வலி உடனே போய்டணும்னு நெனைச்சிக்கிட்டே தேய்ப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தைலம் வலியைப் போக்குதா?
உடம்புல வலி இருந்தாதான தைலம் பயன்படுத்துவோம், அப்போ வலிக்குக் காரணமா அடிபட்டு இருக்கலாம்ல. அப்படி உடம்புல அடி பட்டதும், அந்தச் செய்தி மூளைக்குப் போகும். மூளை, அடிபட்ட இடத்துல archadonic அமிலத்தைச் சுரக்கச் சொல்லும். இந்த அமிலம், COX1, COX2 போன்ற நொதிகளோட சேரும் போது, prostagalandin எனும் மூலக்கூறா மாறும். இந்த மூலக்கூறுதான் வலி எனும் உணர்வை நமக்குக் கொடுக்குது. இதச் சரி செய்ய மருத்துவர் தரும் மாத்திரைகள்… இல்லேன்னா, தைலம் பயன்படுத்தலாம். வலி இருக்குற பகுதியில தைலம் தேய்க்கும் போது, அந்த தைலத்தில்போட்டு இருக்குற மூலப்பொருளைப் (Active ingredient) பொருத்து சில தைலங்கள், தசை வரைக்கும் போய் வேலை செய்யும், சில தைலங்கள் ரொம்ப உள்ள போகாம ஓரளவுக்கு மட்டும் உள்ள போய் வேலை செய்யும்.
தைலத்தில Menthol, கற்பூரம், Capsaicin போன்ற மூலப்பொருட்களில் ஏதோ ஒண்ணு… இல்லனா, இதுபோல, ரெண்டு மூணு மூலப்பொருட்கள் சேர்ந்தும் இருக்கும். ஒவ்வொரு மூலப்பொருளும் ஒரு வகையான வழிமுறையைப் பயன்படுத்தி நம்ம மூளையை, நல்லா வலி குறைஞ்சிடுச்சுனு நம்ப வைக்கும்.
வலி குறைந்த மாதிரி நம்ம மூளையை அழகா நம்ப வைக்கும் திறமை தைலத்துக்கு அதிகம். அது எப்படி?
தைலத்தின் mindvoice, “அதுக்கெலாம் தனி திறமை வேணும் boss!”
Menthol, நரம்புல இருக்கும் TRM 8 எனும் புரதத்தைத் தூண்டிவிடும். பின்னர், வலி இருக்கும் இடத்தில சிலுசிலுன்னு ஆன மாதிரி நம்ம மூளையை நம்ப வச்சிடும். அதோட அந்த இடத்தை மரத்துப்போகவும் வச்சிடும். இதனால, நம்ம மூளையும் அங்க வலி இல்லைன்னு நம்பிடும்.
கற்பூரம் சேர்க்கப்பட்ட தைலம் பயன்படுத்தும் போது, வலி இருக்கும் இடத்துல சூடாக உணர வச்சி, மறுபடியும் மூளையை நம்ப வச்சிடும். மீண்டும் மீண்டுமா???.
Capsaicin எனும் மூலப்பொருள், நரம்புல இருக்கும் TRPV1 எனும் புரதத்தைத் தூண்டிவிட்டு, வலி இருக்குற இடத்தைச் சூடாக உணரவைக்கும். அதோட, இந்த மூலப்பொருள், வலி அந்த இடத்தில் இருக்குன்னு மூளைக்குச் சொல்லும் சமிக்ஞையை (Signal) நிறுத்தவோ இல்ல குறைக்கவோ முயலும். இப்படி சமிக்ஞையை நிறுத்திட்டா, நம்ம மூளைக்கு வலி இருக்கு எனும் தகவலே போகாது அல்லவா? அதனால் வலி குறைஞ்சிடிச்சுன்னு மறுபடியும் மூளை நம்பிடும். என்னதான் நம்ம மூளையை நம்ப வைக்க தைலத்துக்குத் திறமை இருந்தாலும் அது தப்புதான? பாவம்ல நம்ம மூளை! வலி குறைவதனால மட்டும் பிரச்சினை தீர்ந்துருமா? வலிங்கிறது. பிரிச்சினையை நமக்கு நினைவூட்டும் அறிகுறிதான். அதை மட்டும் சரிசெய்வது போதாது பிரிச்சினையைச் சரிசெய்து போதாது.பிரச்சினையைச் சரிசெய்வது தான் முழுமையான தீர்வு.