வெல் வெல் வெல்!

வழியில் கிடக்கும் கல் கல் கல்
வளரும் நிலத்தில் புல் புல் புல்
கடிக்க உதவும் பல் பல் பல்
காலால் நடந்து செல் செல் செல்
வயலில் விளையும் நெல் நெல் நெல்
வாயால் இனிக்கச் சொல் சொல் சொல்
அம்பை எய்யும் வில் வில் வில்
அன்பு வழியில் நில் நில் நில்
அறிவு நூலைக் கல் கல் கல்
அனைத்திலும் சிறந்து வெல் வெல் வெல்!.<
– முனைவர் முரசு நெடுமாறன்