எப்படி? எப்படி?
பனிப்பாறைகள் எவ்வாறு உருகுகின்றன?
– க.பொன்மதி, அறந்தாங்கி
துருவங்களில் குளிர்காலமானது மிக நீளமானது. நீர் குளிர்ந்து உறைந்து பனிக்கட்டியாக மாறத் தொடங்குவதும் அப்போதுதான். பெரும்பாலான கடல் படுகைகளின் பருமன் ஆறரை அடிக்கும் குறைவுதான். ஆனால், நிரந்தரமாக பனிப்பாறையாகவே கிடக்கும் கடல் ஆர்டிக் கடல்தான். இது 10 அடியிலிருந்து 16 அடிவரை கூட இருக்கும். கிளைசியர் என்றழைக்கப்படும் இந்தப் பனிக்கட்டி ஆறு, மெல்ல நகர்ந்து கரையைத் தட்டும்போது உடைந்து சிறிதும் பெரிதுமாக பல பனிக்கட்டிப் பாறைகளாக உருவாகின்றன. இதைத்தான் ice berg என்கிறார்கள். இவை சிறு சிறு துகள்களாகப் பிரிவதால் உருக ஆரம்பிக்கின்றன.
– முகில் அக்கா