இயற்க்கையைக் காப்போம்!
தாகம் தீர்க்கும் தண்ணீர்தான்
தம்பி நமது உயிர்காப்பு;
சேக ரித்து வைத்திடவே
சிக்க னத்தைக் கடைபிடிப்போம்!
ஏரி குளத்தைத் தூரெடுத்து
ஏற்ற வாறு வைத்திட்டால்
மாரிக் கால நேரத்தில்
மழையின் நீரைச் சேர்த்திடலாம்!
காட்டில் மரங்கள் இருந்தால்தான்
கால மெல்லாம் மழை பொழியும்;
போட்டி போட்டு வெட்டாமல்
போற்றிக் காத்தல் நம் கடமை!
வனத்தில் மரங்கள் வளர்வதற்கும்
வானின் மழையே வேண்டுமன்றோ?
வனத்தில் வாழும் உயிர்களையும்
வாழ வைத்தல் நம் கடமை!
நீரும் வனமும் நிலத்தில்நம்
நிதியாம் என்றே உணர்ந்திட்டால்
ஊரும் உழவும் செழித்திடுமே;
உயிர்கள் நலனைப் பெற்றிடுமே!
இயற்கை ஈந்த செல்வத்தை
என்றும் பொறுப்பாய்க் காத்திடுவோம்;
இயற்கை தன்னை அழித்திடவே
இங்கே எவர்க்கும் உரிமையில்லை!.
– கே.பி. பத்மநாபன், கோவை
பண்ணமைத்துப் பாடி வாட்ஸ் அப் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள்! சிறந்த பாடல்கள் பெரியார் பிஞ்சு சீஷீutuதீமீ-லும் இணைய தளத்திலும் வெளியிடப்படும்.