மேட்டில் சிட்டு!
மேட்டில் பாராய் சிட்டு – சிட்டின்
மேனி அழகு பட்டு
எழுப்பும் சிட்டின் ஓசை – கேட்க
எனக்கு மிகவும் ஆசை
இன்னும் ஏனோ அங்கே – அதுதான்
ஏன்வர வில்லை இங்கே
வரும்வரும் விரைவில் பாராய் – நீ
வணக்கம் அதற்குக் கூறாய்!
– முனைவர் முரசு நெடுமாறன்