உலகநாடுகள் – சுவிட்சர்லாந்து
மத்திய அய்ரோப்பாவில் வளர்ச்சியடைந்த நாடுகளின் மத்தியில் உள்ளது.
அய்ரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்றழைக்கப்படுகிறது.
சுவிஸ் கைக்கடிகாரங்கள், சுவர்க் கடிகாரங்கள் உலகப் புகழ் பெற்றவை.
தலைநகரம்: பெர்ன் (Bern)
மொழிகள்: ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரொமான்ஸ்ச்
பெரிய நகரங்கள்: சூரிச் (Zurich), ஜெனிவா, பெர்ன்
நாணயம்: சுவிஸ் ஃபிராங்க் (Swiss Franc)
Federal Chancellor:கொரினா கசனோவா (Corina Casanova) முக்கிய ஆறுகள்: ஃரைன், ரோன், டிசினோ உலக முதலீட்டாளர்களுக்கு மிகப் பாதுகாப்பான நாடு.
அய்ரோப்பியக் கடைசிப் பனிக்காலத்திற்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்ந்து வந்த ஹெல்வீஷியர் (Helvetian) ரீஷியர் ஆகிய இனத்தினரை ரோமானியர் கி.பி.முதல் நூற்றாண்டில் வென்றது முதல் இந்நாட்டின் வரலாற்றுக் காலம் தொடங்குகிறது. 5ஆம் நூற்றண்டில் டியூட்டானியர் இந்நாட்டை வென்றனர். 7ஆம் நூற்றாண்டில் பிராங்க் அரசுடன் சேர்க்கப்பட்டு கிறித்தவ சமயம் நிலைபெற்றது. 1291 முதல் நிரந்தரக் காப்புச் சங்கம் தோன்றியது. 1648இல் நிறைவேறிய West Phalia உடன்படிக்கையின்படி விடுதலை பெற்றது.
1848 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. 1515க்குப் பின் நடைபெற்ற முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் எதிலும் கலந்துகொள்ளவில்லை. எந்த நாட்டிற்கும் ஆதரவும் கொடுக்கவில்லை. அய்ரோப்பிய யூனியனில் நடுநிலை வகித்த ஒரே நாடு என்ற பெயரினை உடையது.
அய்.நா. சபையின் உறுப்பினராக 2002இல்தான் சேர்க்கப்பட்டது அதற்கு முன்பே அய்.நா. அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் நிறுவனம், உலக சுகாதார நிறுவனம், சர்வதேச தபால் கழகம், சர்வதேச தகவல் தொடர்புக் கழகம், உலக வணிக அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைமையகங்கள் ஜெனிவாவில் உள்ளன.
பெண்களுக்கு வாக்குரிமை 1992இல் கொடுக்கப்பட்டது. இங்குள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் பாதுகாக்கப்படுவதால் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ளனர். அண்மையில் இந்த ரகசிய வங்கிக் கணக்கு முறை அகற்றப்பட்டது. எல்லாச் சட்டங்களும், உடன்படிக்கைகளும் பொதுமக்களின் வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின்பற்றப்படுகின்றன. நாட்டின் பெரும்பகுதி மலைப்பாங்கான பகுதியாக இருப்பினும் போக்குவரத்து ஓரளவு நல்லமுறையில் உள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதிபர் கிடையாது. Federal Council என அழைக்கப்படும் எழுவர் குழுவால் ஆளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களுள் ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
புவியியல் அமைப்பு:
வடக்கில் ஜெர்மனி, மேற்கில் பிரான்ஸ், தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா எல்லைகளாக அமைந்துள்ளன.
இயற்கையமைப்பு: 1. வடமேற்கில் உள்ள ஜீரா மலைத்தொடர், 2. மத்திய சுவிட்சர்லாந்து பீடபூமி, 3. தெற்கே ஆல்ப்ஸ் மலைத்தொடர் என 3 பிரிவுகளாக உள்ளது.
வேளாண்மை: நாட்டின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம் காடுகள் இருப்பினும், 10 சதவிகித விவசாயமே நடைபெறுகிறது. கோதுமை, பார்லி, ஓட்ஸ், பழங்கள், உருளைக்கிழங்கு முதலியன விளைகின்றன.
கல்வி: பொது மற்றும் தனியார் பள்ளிகள் இருந்தாலும் சர்வதேச பள்ளிகளே அதிகம் உள்ளன. ஆரம்பக் கல்வி 6 வயதில் தொடங்கினாலும் பெரும்பாலான கேன்டன்ஸ் பள்ளிகளில் 4, 5 வயதிலும் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.
12 பல்கலைக்கழகங்கள் உள்ளன. முதல் பல்கலைக்கழகம் Basel என்னுமிடத்தில் 1460இல் தொடங்கப்பட்டுள்ளது. University of Zurich பெரியது.
சுற்றுலாத் தளங்கள்: ஜெனிவா, லுசெர்னி (Lucerne), சுரிச் (Zurich), இன்டர்லேகன் (Interlaken), ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், ரிஜி மற்றும் ஸ்டென்செர்கான் மலைத்தொடர்கள், அருங்காட்சியகங்கள்.
– மலர்