கதை கேளு! கணக்குப் போடு!
கிணற்றுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த தவளை ஒன்றிற்கு நிலப்பரப்பை – வெளிஉலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கிணற்றை விட்டு எப்படி வெளியில் வருவது என்று யோசித்தது.
சுற்றுச் சுவரின் உயரம் 16 அடியாக இருந்தது. கிணற்றின் உள்ளே படிக்கட்டுகளும் இல்லை. மேலும், சுவரின் உட்புறம் முழுவதும் பாசி படர்ந்திருந்தது. எனினும், தவளை முயற்சி செய்யத் தொடங்கியது.
தனது முயற்சியில் எம்பிக் குதித்தது. சரியாக 2 அடிதான் தவளையால் தாவ முடிந்தது. சுவரில் இருந்த பாசி வழுக்கியதில் ஒரு அடி கீழே சென்றது. ஒவ்வொரு முறையும் இரண்டு அடி தாவி ஒரு அடி வழுக்கிக் கீழே வந்தது.
ஒரு அடி கீழே செல்வதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தவளை, தனது முயற்சியால் தொடர்ந்து தாவிக் குதித்துக் கொண்டே இருந்தது.
முயற்சியின் பலனாக நிலப்பரப்பை – வெளிஉலகைப் பார்த்து ரசித்தது. தவளை எத்தனையாவது தாவலில் கிணற்றுக்கு வெளியே வந்திருக்கும் என்று சொல்லுங்கள்.