விடுகதைகள்
1. கண்ணாடி போல் மின்னும், காற்றிலே இது மிதக்கும், கண்பட்ட மாயத்தில் காற்றில் கலந்துவிடும். அது என்ன?
2. காலைப் பிடிப்பவனுக்குக் கழுத்தைப் பிடித்தால் போச்சு. கழுத்தைப் பிடிப்பவனுக்குக் காலைப் பிடித்தால் போச்சு. அது என்ன?
3. சக்கையாய்ப் பிழிந்தாலும் தன் குணம் மாறாது. பொக்கை வாய்ப் பெரியவரும் புன்னகைத்து அருந்திடுவார். அது என்ன?
4. தலைமேலே கவசம் உடம்பெல்லாம் கண். அது என்ன?
5. கிண்ணி போலப் பூப்பூக்கும். கிள்ளி முடிக்க உதவாது. அது என்ன?
6. கையில் தவழும், பையில் உறங்கும். அது என்ன?
7. சந்துக்குள் இருந்து சதிராடுவான். சண்டைக்கும் சரி, சமாதானத்துக்கும் சரி. அவன் யார்?
8. நித்தம் நித்தம் உழுவான். பல் வரிசைக்காரன். அவன் யார்?
9. காட்டில் பாடித் திரிந்தாலும் என்னைக் கச்சேரிக்கு அழைப்பதில்லை. நான் யார்?
10. வடிகட்டும் முட்டாளுக்கு வாய்த்த உடம்போ ஓட்டை. அது என்ன?