வித விதமா… ரக ரகமா… செல்பேசிகள்
பின் அட்டையில் பார்த்தீர்களே, அந்த செல்பேசிகள் மட்டுமல்ல இங்குள்ளதும் சேர்த்து இப்போதைக்கு 19 வகையான செல்பேசிகளை வடிவமைத்துள்ளார்கள். தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் செல்பேசி, கையில் கடிகாரம் போல கட்டிக்கொள்ளும் செல்பேசி, மேசையில் வைத்துக் கொண்டு பேசுவதுடன் அதிலிருந்து ஒரு திரையையும் உருவாக்கிப் படம் பார்க்கும் செல்பேசி, கணினியாகவும் பயன்படுத்திக் கொள்ளும் செல்பேசி, பார்வையற்றோர் பயன்படுத்துவதற்கேற்ப பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட செல்பேசி, பேனா வடிவில் செல்பேசி, இலை போன்ற நெகிழ்தன்மையில் அமைந்து காதிலேயே மாட்டிக் கொள்ளும் செல்பேசி, இலைதழைகளால் உருவாக்கப்பட்டு மறு சுழற்சிக்கு ஏற்ற வகையில் அமைந்த செல்பேசி, விளையாட்டு வீரர்கள் கையில் கட்டுக்கொள்ளும் செல்பேசி, கையில் ஒளிபாய்ச்சி தொட்டுப் பயன்படுத்திடும் செல்பேசி, கைப்பை போன்ற செல்பேசி, க்யூப் விளையாட்டுக் கருவி வடிவிலான செல்பேசி என விதவிதமான செல்பேசிகள் வரப் போகின்றன. இனி செல்பேசிக்கு என தனியே கவர்களோ, பையோகூட தேவையில்லாமல் போய்விடும். முதல் படத்தில் உள்ள செல்பேசியைப் பாருங்கள், காதிலேயே மாட்டிக்கிட்டா ஏன் தொலையப்போகுது? போற இடத்துல வைச்சுட்டு அப்புறம் தேடுற வேலையும் இருக்காது. ஆனா… செல்பேசில வர்ற கதிர் வீச்சைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்போறாங்கன்னுதான் தெரியல. இவ்வளவு வசதி செஞ்சவங்க அதையும் செய்யாம விட்ருவாங்களா… என்ன…!