ஓவியம் வரையலாம், வாங்க! ஹினாமத்சூரி
ஹினாமத்சூரி என்றால் பொம்மைகள் நாள், அல்லது பெண்கள் நாள் (Womens’ day) என்று பொருள். சிவப்பு நிறக் கம்பளத்தில் மூடப்பட்ட மேடைகளில் அந்தக் காலத்தில் இருந்த பேரரசர், பேரரசி, இசைக் கலைஞர்கள், உதவியாளர்கள் மற்றும் பணிப்பெண்களின் உருவப் பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டாடுக¤றார்கள்.
இவ்விழா மார்ச் 3ஆம் தேதி கொண்டாடப்-படுகிறது. பிப்ரவரி மாதக் கடைசியிலிருந்தே கொண்டாட்டத்திற்குத் தயாராகி விடுவார்கள்.
மார்ச் மூன்று அன்று பெண்கள் நாளைக் கொண்டாடிய அன்றே அந்த பொம்மைகள் அனைத்தையும் எடுத்து விடுவார்கள். ஏனென்றால் மூன்றாம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் அந்த வீட்டுப் பெண்களுக்குத் திருமணத் தடைகள் ஏற்படும் என்கிற மூடநம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், இதற்கான உண்மைக் காரணம் என்னவென்றால், மழைக்காலம் என்பதால் இந்தப் பொம்மைகள் மீது மழைத்துளி பட்டு ஈரமாகிச் சேதமடைந¢துவிடும் என்பது தான்.
இன்றைக்கு நாம் என்ன வரையப் போகிறோம்? ஜப்பான் பெண் பொம்மையைத்தான் வரையப் போகிறோம்.
வளர்ந்து வரும் ஓவியர்களே! வாழ்த்துகள்.
உங்கள் வளர்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது. பொறுமையும், நிதானமும் உங்களுக்குப் பழக்கம் ஆகிவிட்டது என நீங்கள் காட்டும் ஆர்வத்தில் இருந்தே தெரிகிறது. ஓர் ஓவியருக்குத் தேவையான அனைத்து இலக்கணங்களோடு மிகவும் ஆர்வத்துடன் சித்திரக் கலையில், ஆழ்ந்து இருக்கிறீர்கள். பாராட்டுகள். இனிமேல் எதை வரைந்தாலும் அதை நுட்பமாக வரைய உங்களால் முடியும் என்ற நம்பிக்கை பெரியார் பிஞ்சு இதழுக்கு ஏற்பட்டுள்ளது. இங்கே வரையப்பட்டுள்ள ஜப்பான் பெண் பொம்மையைக் கூர்ந்து கவனித்து கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி வரைந்து பழகுங்கள்.
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் D,U,Y,V மற்றும் O.
1. முதலில் ‘D’ எழுத்தின் நேர்கோடு மேற்புறத்திலும் வளைக்கோடு கீழ்ப்புறத்திலும் இருக்குமாறு வரையவும்.
2. Dஇன் மேற்பகுதியில் U எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
3. U எழுத்தை வளைவுக் கோடு கொண்டு D யோடு இணைத்துவிடவும். பின்னர் ‘U’ எழுத்தின் மேற்பகுதியில் படத்தில் காட்டியபடி வரைந்து கொண்டால் ஜப்பான் பெண்ணின் தலைப் பகுதி கிடைத்துவிடும்.
4. தலைப் பகுதியின் அடிப்பக்கத்தில் D எழுத்தை இவ்வாறு சற்று பெரிதாக படத்தில் காட்டியபடி எழுதவும்.
5. தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு Dஇன் உட்பகுதியில் ‘Y’ எழுத்தை எழுதவும்.
6. Dஇன் அடிப்பகுதியில் ‘V’ எழுத்தை சற்று உயரமாக எழுதவும்.
7. V இன் உட்பகுதியை வளைவுக்கோடு கொண்டு இணைக்கவும். பின்னர் D, V எழுத்துக்களின் இடது பக்கத்தில் ‘O’ எழுத்தை எழுதவும்.
8. தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு ‘Y’ எழுத்தை படத்தில் கண்டுள்ளவாறு அழகு படுத்தவும்.
9. D, V எழுத்துக்களின் வலது பக்கத்தில் படத்தில் காண்பது போல் ஜப்பான் பெண்ணின் கையை வரைந்து கொள்ளவும்.
10. தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு ‘O’ன் உட்குதியில் படத்தில் காட்டியுள்ளபடி ‘டிசைன்’ செய்து கொள்ளவும்.
11. இப்பொழுது ஜப்பான் ‘லேடி’ யின் கண்களையும் வாய்ப் பகுதியையும் வரைந்து கொண்டால் மிக அழகான உருவம் கிடைத்து விடும். வண்ணம் தீட்டி மகிழவும்.