துணுக்குச் சீட்டு – 18 : வேரிலிருந்து உச்சிக்கு நீர் போகிறது?
என் வீட்டுச் செடிகள் மாதிரி உங்க உங்க வீட்டிலையும் சூரியனோட பாசம் தாங்காம செடிங்க எல்லாம் தண்ணி வேணும் வேணும்னு கேட்டுச்சா? அது எப்படி செடிங்க பேசும்? அதை தெரிஞ்சுக்கணும்னா முன்னாடி வந்த துணுக்குச் சீட்டுகள் எல்லாம் எடுத்துப் பாருங்க. அது சரி புவியீர்ப்பு விசை இருந்தாலும் எப்படி மர உச்சி வரைக்கும் தண்ணீர் போகுது? இந்த கேள்வியைப் பற்றி முதலிலேயே யோசிச்சோம் அல்லவா? அதுக்கு இப்போ பதில் தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
நம்மளோட உடம்புல ரத்தக்குழாய் இருக்கிற மாதிரி செடிகளிலும் இரண்டு வகை குழாய்கள் இருக்கு. ஒன்று xylem இன்னொன்று phloem. வேரிலிருந்து இலைகள் வரைக்கும் தண்ணீர் போக xylem உதவுவது. சத்துப் போக phloem உதவுது. அண்டத்தில் இருக்கும் எல்லா பொருட்களிலும் மூலக்கூறுகள் இருக்கு. அதேபோல தண்ணீரையும் மூலக்கூறுகள் இருக்கும். இதுல ஒவ்வொரு தண்ணீர் மூலக்கூறும், தன்னை சுற்றி இருக்கிற மற்ற தண்ணீர் மூலக்கூறுகள் எல்லாம் அதோட நண்பனா இருக்கணும்னு நினைக்கும். அதனால அது மற்ற தண்ணீர் மூலக்கூறுகளை அதன் பக்கம் இழுக்கும். இதை cohesion என்று சொல்லுவோம்.
இதுபோலவே தண்ணீர் அல்லாத மூலக் கூறுகளிடம் தண்ணீரின் மூலக்கூறுகள் போய் ஒட்டிக்கிட்டு இருந்தா அதை adhesion அப்படின்னு சொல்லுவோம்.
இப்போ ஒரு கிண்ணத்துல தண்ணீர் இருக்குன்னு வச்சிப்போம். அதுல ஒரு straw -வோ வைக்கிறோம். இந்த straw-வோட விட்டம் ரொம்ப ரொம்ப ரொம்ப சின்னதா இருந்ததுன்னா, கிண்ணத்தில் இருக்கிற தண்ணீர் மட்டத்தை விட straw-வில் இருக்கிற நீர்மட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கும். கிண்ணத்தில் தண்ணீரோட நீர்மட்டத்தை தாண்டி மேல இருக்கிற straw-வோட உட்புறத்தில் ஒட்டிக்கிட்டு இருக்கும் தண்ணீரின் மூலக்கூறுகள் மற்ற மூலக்கூறுகளை அதன் பக்கம் இழுக்கும். இதனால தண்ணீரின் நீர்மட்டம் straw-வில் அதிகமா இருக்கும்.
அதோட straw-வோட விட்டம் குறையக் குறைய adhesion அதிகமாகி cohesion குறைவா இருக்கும். இதனாலேயே straw-வோட விட்டம் குறைவா இருந்துச்சுன்னா தண்ணீரோட நீர்மட்டத்தை விட straw -வோட நீர்மட்டம் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும். இத capillary action அப்படின்னு சொல்லுவோம்.
செடி கொடிகளில் இருக்கும் xylem-வோட விட்டம் மிக மிக குறைவாக இருக்கும். இதனால, xylem-த்தில் புவியீர்ப்பு விசையைத் தாண்டி தண்ணீர் மரத்தின் உச்சிக்கு போக capillary actionக்கு உதவுது. ஆனால், வெறும் capillary action மட்டும் தண்ணீர் மரத்தின் உச்சிக்குப் போக காரணம் இல்லை. Capillary action இதுல உதவிக்கரம் மட்டும் தான் நீட்டும். தண்ணீர் மேல வர மிக முக்கிய காரணம், transpiration தான்.
Cohesion-ன்னால தண்ணீரின் மூலக்கூறுகள் எல்லாம் ஒன்னோட ஒன்னு சங்கிலி மாதிரி இணைந்து இருக்கும். இலைத்துளைகள் மூலமா தண்ணீர் வெளிய போகும் போது, அங்க ஒரு தண்ணீர் மூலக்கூறு இல்லாமல் போகும். அப்போ அங்க ஓரு தண்ணீர் மூலக்கூறுக்கான வெற்றிடம் உருவாகுது. வெளியேறிய மூலக்கூறு சும்மா போகாம, அதோட ஒட்டி இருக்கும் மற்ற மூலக்கூறுகளை அந்த வெற்றிடம் நோக்கி இழுத்துவிட்டுட்டுப் போகும். Y man, Y?
இப்படி ஒரு மூலக்கூறு வெளியேறுவதால், சங்கிலி மாதிரி எல்லாம் மூலக்கூறுகளும் அந்த வெற்றிடத்தை நோக்கி இழுக்கப் படுது.
இதுல capillary action எங்க உதவுது? முன்னாடி பார்த்த மாதிரி, விட்டம் குறைவாக இருந்தா, adhesion அதிகமாகவும் cohesion குறைவாகவும் இருக்கும் அல்லவா? இப்படி இருக்கும் போது, straw – வோட உட்புறத்தில், தண்ணீர் ஒட்டிக்கிட்டு இருக்கும் நீர் மட்டத்தைவிட அதற்கு நடுவில் இருக்கும் நீரின் மட்டம் குறைவாக இருக்கும். அதாவது ‘U’ மாதிரி நீரின் மட்டம் straw-வில் இருக்கும்.
இப்படி இருக்கும் போது, நடுவில் இருக்கும் மூலக்கூற்றின் நீர் மட்டம், அதன் பக்கத்தில், அதாவது straw-வின் உட்புறத்தில் ஒட்டிக்கிட்டு இருக்கும் மூலக்கூற்றின் நீர் மட்டத்தோட சமமாக இருக்கணும்ன்னு, நடுவில் இருக்கும் நீர் மூலக்கூறு அதுக்கு கீழ இருக்கும் மூலக்கூறுகளை அதுக்குக்கிட்ட இழுக்கும். ஆனால், விட்டம் குறைவா இருக்குறதால, மேலும், adhesion அதிகமாகி, மீண்டும் ‘U’ வடிவத்துக்கு நீர் மட்டம் வரும். இதை சரிசெய்ய மீண்டும் நீர் மட்டம் உயரும். இப்படி தான் capillary action, transpirationக்கு உதவிக்கரம் நீட்டுது. Xylem-உடைய விட்டம் ரொம்ப குறைவு என்பதால், இந்த capillary action மற்றும் transpiration மட்டுமே புவியீர்ப்பு விசையைத் தாண்டி மர உச்சிக்குத் தண்ணீர் போகப் போதுமானதா இருக்கு. இப்போ ஒத்துப்குறிங்களா, எந்த மாயமும் இல்லை மந்திரமும் இல்லை, எல்லாம் அறிவியல் தான்னு..