ஓவியம் வரையலாம், வாங்க! – பீரோ மற்றும் ட்ரங்க் பெட்டி
குழந்தைகளே! இந்த இதழில் நாம் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம் என்றால், நம் வீடுகளில் துணிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அழகாக அடுக்கி வைத்துப் பாதுகாக்கவும், அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளில் கோப்புகளை (File) முறையாக அடுக்கி வைத்துப் பாதுகாக்கவும் பயன்படுத்தும் பீரோ மற்றும் ட்ரங்க் பெட்டி இந்த இரண்டையும் தான்! நாம் மரப் பலகையோ, இரும்புத் தகடோ இல்லாமல் பேப்பரில் வரையப் போகிறோம்.
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் E மற்றும் L.
1. ‘E’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும். நடுக் கோட்டை சற்றே வலது பக்கம் உள்ள கோட்டுக்கு அருகே இருக்குமாறு எழுதவும்.
2. E எழுத்தின் அடிப்பகுதியில் ‘L’ எழுத்தை படத்தில் காட்டியபடி சாய்வாக எழுதவும்.
3. தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு ‘E’ எழுத்தின் மேல் பகுதிக் கோடுகளை ஒட்டியவாறு ‘L’ எழுத்தை தலைகீழாக எழுதவும்.
4. தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு. மேலிருந்து கீழாக ஒரு கோடு போடவும். பீரோ வந்தாச்சு! இப்போது கைப்பிடி மற்றும் அடிப்பகுதிகளை வரையவும்.
5. பீரோவுக்கு அருகே மற்றொரு ‘E’ எழுத்தை எழுதவும்.
6. E எழுத்தின் உட்பகுதியில் ‘L’ எழுத்தை படத்தில் காட்டியபடி அகலமாக எழுதவும்.
7. சற்று இடைவெளி விட்டு ‘L’ எழுத்தை படத்தில் காட்டியபடி எழுதவும்.
8. சிறிய அளவு இடைவெளி மட்டும் விட்டு மீண்டும் ஒரு முறை ‘L’ எழுத்தை எழுதவும்.
9. ‘L’ எழுத்தைப் படத்தில் காட்டியபடி தலைகீழாக எழுதவும்.
10. படத்தில் காட்டியவாறு கைப்பிடி மற்றும் மூலைகளில் கோடுகளைக் கொண்டு டிசைன் செய்தால் ட்ரங்க் பெட்டி தயார்!
இரண்டுக்கும் இருவேறு வண்ணங்கள் தீட்டி மகிழுங்கள்.