வரலாறு அறிவோம் – 2 : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்
சீனர்களின் முதல் மன்னர் என்று தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்ட சின் சி ஹுவாங் தனக்கு முன்பு சீனா முழுவதும் இருந்த பல்வேறு குறுநில மன்னர்களிடம் ஆட்சி முறை ஒருங்கிணைப்பு குறித்துப் பேசினார். இதற்குச் சிலர் ஒப்புக் கொண்டனர் சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாத குறுநில மன்னர்கள் மீது போர் தொடுத்து அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தார். அல்லது அவர்களை அங்கிருந்து விரட்டினார். இப்படியாக முழுமையான சீன நாட்டைக் கட்டியமைத்த முதல் மன்னர் ஆனார்.
இவரது ஆட்சிக்காலத்தில் காகிதத்தின் பயன்பாடு தகவல் பரிமாற்றத்திற்குப் பெரிதும் பயன்பட்டது.
இன்றைய இந்தியாவின் மாநில அரசு, ஒன்றிய அரசைப் போன்றே அன்று சின் சி ஹுவாங் மன்னரும் கட்டமைப்பை உருவாக்கி இருந்தார். மாகாணத் தலைவர்கள் அதன் நிருவாகத்திற்கு தங்களுக்கு உதவ அப்பகுதி மக்களிடையே பலசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் போர்ப்பயிற்சி அளித்து அவர்களைப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்துதல் என்ற மிகவும் நேர்த்தியான நிருவாக முறையை உருவாக்கியிருந்தார்.
அவரது நிருவாக முறையை மக்களிடையே கொண்டு செல்ல மாதம் தோறும் அரசரின் செய்தி காகிதத்தில் எழுதப்பட்டு மக்களிடையே வாசிக்கப்பட்டது.
மாகாணத் தலைவர்களும் தங்கள் நிருவாகம் தொடர்பான செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல, காகிதங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இவைதான் இன்றைய நவீன கால நாளிதழ்களாக மாறின.
ஏற்கனவே சீனர்கள் தாங்களாகவே காலநிலை மற்றும் குறிப்பேடுகளை எழுதத் துவங்கியிருந்தாலும் அவர்களுக்கு நாளிதழ்கள் என்ற ஒன்றை நாம் பயன்படுத்துகிறோம் என்பதே தெரியாமல் ஆயிரம் ஆண்டுகள் அதனோடே வாழ்ந்திருந்தனர்.
இந்தக் காலகட்டத்தில் பல அறிஞர்கள் மக்களை சீரான வழியில் செலுத்தத் தத்துவங்களை எழுதத் தொடங்கினர்.
அங்குள்ள அறிஞர்களும் மதநம்பிக்கைகளை மக்களிடம் திணிக்கவில்லை. மாறாக நல்லொழுக்கம், வாழ்வியல் போன்றவற்றை எழுதினர்.
அப்படி எழுதியவர்களுள் முக்கியமானவர் சீனாவின் தத்துவஞானி கன்பூசியஸ் ஆவார்.
இவரது தத்துவங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
காரணம் கான்பூசியஸ் தத்துவங்கள் எளிமையாக மக்களுக்குப் புரிந்தன.
இந்த நிலையில் சின் சி ஹுவாங் கிமு 241இல் தனது மகளின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துத் தத்துவங்களைச் சேகரித்து எழுதும்படி ஆணையிட்டார்.
தத்துவங்களைச் சேகரித்த மகள் தந்தையின் ஆலோசனையின் பேரில் சில கருத்துகளை நீக்கியும், காலச்சூழலுக்கு ஏற்ப புதியவற்றைச் சேர்த்தும் எழுதினார். ஆனால் கான்பூசியசுக்கு இது பிடிக்கவில்லை. ஆகவே அவர் இதனை எதிர்க்கவே, கன்பூசியஸ் தத்துவங்களை மக்கள் பின்பற்ற மன்னர் தடைவிதித்துவிட்டார்.
இதில் கவனிக்கவேண்டியது சீன மன்னர் கன்பூசியசைப் பிடித்து சிறையில் அடைக்கவோ, அவரது சீடர்களைக் கழுவேற்றவோ, சிலுவையில் அறையவோ செய்யவில்லை. அவரையும் அவரது சீடர்களையும் அவர் மதித்தார்.
ஆனால், அவர் கருத்துகள் தன்னுடைய அரசாட்சிக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டார். அதற்கு மறுத்து சின் சி ஹுவாங் ஆளுமைக்கு வெளியில் உள்ள பகுதிக்குச் (இன்றைய மங்கோலியாவிற்குச்) சில காலம் கன்பூசியஸ் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கும் காகிதங்களின் பயன்பாடு பரவத் துவங்கியது.
சின் சி ஹுவாங் மறைவிற்குப் பிறகு வந்த அரசர்கள் அனைவரும் காகிதப் பயன்பாட்டைப் பெரிதும் விரும்பி மக்களிடையே கொண்டு சேர்த்தனர். புத்த காலத்திற்கு முன்பே சீனாவில் கடைகளில் காகிதங்கள் விற்பனையில் இருந்ததாம். மன்னரின் முத்திரை பொறித்த காகிதங்கள் பெருமதிப்புக் கொண்டதாகவும் இருந்ததாகச் சீன வரலாறு கூறுகிறது.
கன்பூசியஸ் தத்துவமும் புத்தரின் கொள்கைகளும் ஒரே மாதிரியாக இருக்கவே பவுத்தம் விரைவில் சீனம், கொரிய தீபகற்பம், ஜப்பான் மற்றும் இதர கீழைக் கடல் நாடுகளுக்குப் பரவியது. இதற்கு மிக முக்கிய காரணம் காகிதம் ஆகும்.<
(தொடரும்)