சிறார் பாடல்: பால் குடமும் நீர்க்குடமும்
அம்மா எடுத்தார் பால்குடத்தை – நான்
அளவாய் எடுத்தேன் நீர்க்குடத்தை!
அம்மா கோயில் சென்றாரே! – நான்
அங்கோர் குடிசைக்கு ஓடினனே!
அம்மா பாலைச் சிலைமேலே – மிகப்
பணிவாய்க் கொட்டி வணங்கிட்டார்
குடிசைப் பக்கம் நான்சென்றேன்! – அங்குக்
குடிநீர் இன்றி அழுதிருந்த,
சிறுவர் வாயில் புகட்டினேன்! – அவர்
சிரித்தார்; மகிழ்ந்தார்; வாழ்த்தினார்!
அம்மா என்னைக் கண்டாரே! – அவர்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லையே!