வரலாறு அறிவோம் – 3 : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்
தத்துவமோ, தகவல்களோ மக்களுக்குக் கொண்டு சேர்க்கக் மரக்கட்டைகளில் செதுக்கப்பட்ட அச்சுகளைக் கொண்டு காகிதங்களில் எழுத்துகளைப் பதிக்கத் தொடங்கி விட்டனர்.
காலத்தில் சீனத்தில் காகிதப் பயன்பாடு பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.
ரோமர்கள் அக்காலத்தில் பட்டுப் பாதை வழியாகச் சீனத்திற்கு வணிகம் செய்யச் சென்ற போது காகிதப் பயன்பாடு பரவலாக மேலை நாடுகளைச் சென்றடைந்தது.
ஆசியப் பகுதிகளில் யூதர்கள் இந்த காகிதங்களைத் தங்களின் மதக் கருத்துகளை எழுதும் பொருளாகப் பாவிக்கவே, அது புனிதமாக்கப்பட்டுவிட்டது. கிறிஸ்துவம் மேலை நாடுகளுக்குச் செல்லும் வரை ஆசியா மைனரில் தேவாலயங்களில் வைத்து வணங்கப்படும் ஒன்றாகவே காகிதம் இருந்தது. அதனை மத குருமார்கள் மட்டுமே தொட்டு வாசித்தனர்.
இதனால் அதனைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த இயலாத நிலை உருவாகியது.
புத்தர் காலத்தில் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் காகிதம் அறிவுக்கான பொருளாக மாறியது. எடுத்துக்காட்டாக தட்சசீலம், நாளந்தா, பாரிஸ், வேல்ஸ் ஆகிய பல்கலைக்கழங்களில் கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே காகிதத்தில் பாட நூல்கள் உருவாக்கும் நிலை வந்துவிட்டது.
இந்தியாவில் மவுரியப் பேரரசைச் சுங்கன் என்ற வேதமரபைச் சேர்ந்த மன்னன் கைப்பற்றிய உடன் முதலில் அறிவுச் சுரங்கமான காகிதப் பயன்பாட்டை ஒழித்தான்.
இங்கு நாம் தமிழ்நாட்டை மறந்துவிடவேண்டாம்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்களோடு வணிகத் தொடர்பு கொண்ட தமிழர்களும் காகிதப் பயன்பாட்டை அறிந்திருந்தனர். ஆனால், கெட்ட வாய்ப்பாக வேத மரபு வடக்கே தோன்றிய உடனேயே இந்தியத் தீபகற்பம் முழுவதும் காகிதப் பயன்பட்டை அழித்து ஒழித்தனர். மேலும் அயல்நாடுகளுக்குக் கப்பலில் செல்வதையும் மத விரோதம் என்று கூறித் தடை செய்யவே, இங்கும் காகிதப் பயன்பாடு சில 10 ஆண்டுகளுக்குள் முடிவிற்கு வந்தது.
தென் இந்தியாவில் பவுத்தமும் சமணமும் செழித்திருந்த போது காகிதப் பயன்பாடு இருந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காரணம், பவுத்த சமணக் கொள்கைகள் வாய்மொழியாகவோ அல்லது வேறு வகையிலேயோ மக்களிடையே பரவ பல நூற்றாண்டுகள் தேவை. ஆனால், ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே மக்களிடையே பவுத்தமும் சமணமும் பரவியதென்றால் அதற்கு காகிதப் பயன்பாடு முக்கிய காரணியாக இருந்திருக்கவேண்டும் என்றே சில ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
காகிதம் எளிதில் கரையான் அரிக்கும் தன்மை கொண்டது. அதுவும் இந்தியத் தீபகற்பம் வெப்பமண்டலப் பகுதி ஆகையால் விரைவில் மக்கி மண்ணோடு மண்ணாக மாறி சான்றுகள் இல்லாமல் போய்விட்டது.
பாதுகாத்தவர்களையும் வேதமரபை ஆதரித்த மன்னர்களின் கட்டளையின் படி கண்டுபிடித்துக் கொலை செய்து காகிதங்களைத் தீயிட்டு எரித்துவிட்டனர்.
மேலை நாடுகளில் காகிதப் பயன்பாடு தொடர்ந்து மக்களிடையே பரவலாக இருக்கவே கிபி 1100-களில் மாத இதழ்களை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் சில தனி நபர்கள் கையெழுத்துப் பிரதிகளாக வெளியிட்டு வந்துள்ளனர்.
தமிழ் பேசும் மண்ணில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன காகிதம் கிறிஸ்துவிற்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக புழக்கத்திற்கு வந்தது, 1500களில் வாஸ்கோடா காமா வந்து சென்ற பிறகு அவரோடு மீண்டும் போர்ச்சுகல் சென்றவர்கள் வணிகக் கூட்டத்தினரோடு மீண்டும் இந்தியா வந்தனர். அப்படி வந்தவர்கள் தூத்துக்குடியில் (முத்துக்குளித்துறையில்) இறங்கினர்.
அன்று முத்து வணிகத்திற்காக வந்தவர்கள் முதன்முதலாக காகிதங்களைக் கொண்டுவந்துள்ளனர். ஏற்கனவே வாஸ்கோடா காமாவுடன் வந்த சிலர் இங்குத் தங்கியிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் வீட்டார் கொடுத்தனுப்பிய கடிதம் வழியாக தமிழ்நாட்டில் காகிதம் மீண்டும் சுமார் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் நுழைந்தது, அடுத்த 50 ஆண்டுகளில் அதே தூத்துக்குடியில் உள்ள புன்னைக்காயல் பகுதியில் ஹென்ரிக் ஹென்ரிக்சு என்பவர் 1552ஆம் ஆண்டு தமிழ் அச்சகம் ஒன்றைத் திறந்தார். இதற்காக அவர் காயல்பட்டினத்தில் இருந்து படகில் வடகிழக்கு நோக்கிப் பயணம் செய்து பட்டினப்பாக்கம் (இன்றைய மயிலாப்பூர் அடங்கிய) துறைமுகத்தில் இறங்கி, தமிழ் கற்று, தச்சர்களின் உதவிகளோடு தமிழ் எழுத்துகளைச் செதுக்கி புன்னைக்காயல் திரும்பினார்.
அங்கு ரோமிலிருந்து கொண்டுவந்த அச்சுக் கருவியில் கோத்து முதன்முதலில் தமிழில் நூல் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார். 1552இல் அதாவது அக்பர் தனது மகன்களோடு ஆட்சி அதிகாரப் பகிர்விற்குத் திணறிக்கொண்டு இருக்கும் போது தமிழ்நாட்டில் நூல் அச்சிடும் பணி தொடங்கிவிட்டது.
ஆனால், எப்போதும் போல் இங்குள்ள மதவாதம் ‘அறிவு மக்களைச் சென்றடையக்கூடாது’ என்பதில் முனைப்போடு இருந்து காகிதங்களை அய்ரோப்பியர்களோடு வைத்துக்கொள்ளுமாறும், மறந்தும் வெகுஜன மக்களின் கைகளுக்குக் கொண்டு சேராமலும் பார்த்துக்கொண்டது. ஆனால், இப்படி வெறும் 200 ஆண்டுகள்தான் தடுக்க முடிந்தது, 1700இல் கிழக்கிந்தியக் கம்பெனி வந்த பிறகு காகிதம் இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படத் தொடங்கியது,
1600களில் அய்ரோப்பாவில் அதிகாரப்பூர் வமற்ற முறையில் ஆங்காங்கே தனி நபர்களால் வெளியிடப்பட்ட இதழ்கள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தவே, பிரெஞ்சு அரசு 1620களில் நாளிதழ்கள் சட்டம் கொண்டுவந்தது, விரைவிலேயே இங்கிலாந்தும் ஆங்கில இதழ்கள் தொடர்பாக விதிமுறையை வகுக்கவே, 1680 களில் அதிகாரப்பூர்வச் செய்தி இதழ்கள் வெளியாகத் தொடங்கின. அப்படி வந்த இதழ்கள் அரசின் எதேச்சாதிகாரப் போக்கைக் கண்டிக்கத் தொடங்கிய உடன் மன்னர்கள் வெகுண்டெழுந்து இதழ்களைத் தடை செய்யும் போக்கைக் கையாண்டனர்.
அதற்குள் (அதாவது 1700களில்) அய்ரோப்பா மற்றும் காலனி ஆதிக்க நாடுகள் நாளிதழ்கள் வெளியிடத் தொடங்கிவிட்டனர். இதனால் பத்திரிகைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தியாவிலும் கொல்கத்தாவில் முதல் மாத இதழ் ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்டது. 1800களில் வங்கம், உருது, தமிழ் மொழிகளில் இதழ்கள் வரத்தொடங்கிவிட்டன.
மதம் தவிர்த்த சீனர்கள் 3000 ஆண்டுகளாக காகிதத்தைப் பயன்படுத்தி அறிவுக் களஞ்சியங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தி வந்தனர்.
ஆனால் மதம்கொண்ட ஆசிய மைனர் மற்றும் இந்திய துணைக் கண்டங்களோ காகிதங்கள் கையில் இருந்தும் அதனை எரித்தும் கரையானுக்கு தின்னக் கொடுத்தும்விட்டதால் அறிவில் பின் தங்கிப் போனார்கள்.
காகிதம் போனாலும் தங்களின் அறிவுத் தாகத்தைத் தீர்க்க பனை ஓலைகளையும் செப்பேடுகளையும் தமிழர்கள் பயன்படுத்தினர். ஆனால் வட இந்தியாவில் ஒரு சில செல்வந்தர்கள் மட்டுமே பட்டுத் துணியில் எழுதி வைத்தனர். அதுவும் அறிவார்ந்த கருத்துகளை அல்ல, கடவுளர் கதைகளும் தேவையற்ற பஜனை வரிகளும் எதற்கும் உதவாத கற்பனைக் கதைகளையும் தான் எழுதி வைத்தனர். கருவி எவர் கையில் கிடைக்கிறது என்பதும், அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதும் இதிலும் முக்கியம் அல்லவா? காகிதத்தின் வரலாறு இதிலும் நமக்கும் அறிவுத் தெளிவூட்டுகிறது.
(முற்றும்…)