திருக்குறள் பொருட்பால் – அரசியல்

அதிகாரம் 43 – அறிவுடைமை
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423)
எந்த ஒரு பொருளைப் பற்றியும் எவரெவர் என்ன என்ன சொல்லக் கேட்டாலும், கேட்டவாறு அப்படியே ஏற்றுக் கொண்டு விடாமல், அந்தப் பொருளினுடைய உண்மையான பொருளைக் கண்டறிவதே அறிவுடைமையாகும்.
உரை:
டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்
எம்.ஏ., டிலிட்