அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உடையணியில்
கு.உ. திலீபன் – கோ.மு. பார்கவி ஆகியோரின் மகனும், திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அவர்களின் பெயரனுமான தி.பா.இனியன் (3 வயது) அடையாறு, காந்திநகர், தூய மைக்கேல் மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திரநாள் விழாவில், சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உடையில் மாணவ, மாணவியர் வரவேண்டும் என கூறியிருந்தனர். இனியன் தனது தேர்வாக (வீட்டில் இருக்கும் அம்பேத்கர் படத்தைப் பார்த்து) அண்ணல் அம்பேத்கர் உடையில் பள்ளிக்குச் சென்று சிலை வடிவில் அமைந்துள்ள அம்பேத்கர் தோற்றத்துடன் ஒளிப்படமும் எடுத்துக் கொண்டார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடன் பயிலும் மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.