ஸ்லோவேக்கியா
ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நாடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும்
தலைநகரம் பெரிய நகரம் – பிராத்திஸ்லாவா.
ஆட்சி மொழி சுலோவாக் – ஏறத்தாழ 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி சுலோவாக்கிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
குடியரசுத் தலைவர் இவான் காச்பாரொவிச்
பிரதமர்: ராபர்ட் ஃபிகோ
நாணயம்: சுலோவாக் கொருனா (1 கொருனா = 100 ஹலியெர்)
ஆறாம் நூற்றாண்டுக் காலத்தில் ஸ்லேவிக் ஸ்லோவாக் இனத்தவர் இன்றைய ஸ்லோவேகியா பகுதியில் குடியேறி வாழ்ந்தனர். 9ஆம் நூற்றாண்டில் மொராவியன் அரச வம்சம் இவர்களை ஒன்று படுத்தியது. 907ஆம் ஆண்டில் மொராவியா நாடு மாக்யர்களின் கையில் வீழ்ந்ததால் ஸ்லோவேகியர்கள் ஹங்கேரி நாட்டின் ஆட்சியில் 1918 வரை இருந்தனர். அதன் பின்னர் பொஹமியாவுடன் இணைந்து பிறகு செக்கோஸ்லேவேகியா என்ற நாடாக உருப்பெற்றது.
1990இல் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் கலைந்து போன நிலையில் செக்கோஸ்லேவேகியாவின் குடியரசுத் தலைவராக வாக்லவ் ஹாவல் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1991இல் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவாக செக் நாடு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி ஸ்லோவேகியக் குடியரசாக 1.-1-.1993 முதல் விளங்குகிறது.
மத்திய அய்ரோப்பாவில் போலந்து நாட்டுக்குத் தெற்கே உள்ள இந்நாட்டின் பரப்பு 48 ஆயிரத்து 845 சதுர கி.மீ. மக்கள் தொகை 55 லட்சம். ரோமன் கத்தோலிகர் 69 விழுக்காடு புரொடஸ்டன்ட் 11 விழுக்காடும் உள்ளனர்.
மீதிப்பேர்களில் 13 விழுக்காடு மக்கள் மதம் இல்லை எனக் கூறுபவர்கள்.
ஸ்லோவேக் மொழி ஆட்சி மொழி. மக்கள் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள்.
நாட்டின் அதிபராகக் குடியரசுத் தலைவர் உள்ளார். ஆட்சித் தலைவராகப் பிரதமர். 11 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.