ஓவியம் வரையலாம், வாங்க!அரண்மனை
நண்பர்களே! இன்று நாம் என்ன வரையப் போகிறோம் தெரியுமா?
நாம் நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடும் போது நம் மனதில் உள்ள எண்ணக் கோட்டையை அங்குள்ள மணலில் கட்டி விளையாடி மகிழ்வோம் அல்லவா? அந்த அரண்மனையைத் தான் இன்று வரையப் போகிறோம்.
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் பி, ஞி மற்றும் ஹி.
வாங்க வரையலாம்…
H எழுத்தைச் சற்று உயரமாக எழுதவும்.
அடுத்து ஒரு பெரிய H எழுத்தைப் படத்தில் காண்பது போல் படுக்கை வசமாக எழுதவும்.
படுக்கை வசமாக எழுதிய பெரிய H எழுத்துக்கு வலப்பக்கத்தில் மற்றும் ஓர் உயரமான H எழுத்தைப் படத்தில் காண்பது போல் எழுதவும்.
இரண்டு ஓரங்களிலும் உள்ள H எழுத்தின் மேல் பகுதியில் D எழுத்தைப் படுக்கை வசமாக எழுதவும்.
படுக்கை வசமாக எழுதிய பெரிய H எழுத்தின் மய்யப் பகுதியில் H, D எழுத்தைப் படத்தில் காண்பது போல் எழுதவும்.
படுக்கை வசமாக எழுதிய பெரிய H எழுத்தில் படத்தில் காண்பது போல் ‘U’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்து விடவும்.
படத்தில் காண்பது போல் வண்ணம் தீட்டி மகிழுங்கள்!