திறன்பேசி

அறிவியல் அறிஞர்
கண்டு பிடித்த
அருமைக் கருவி
கைப்பேசி
அறிய நமக்குச்
செய்திகள் பலவும்
அளிக்கும் விந்தைத்
திறன்பேசி
எங்கோ நடக்கும்
நிகழ்வுகளை இது
எடுத்து நம்மும்
காட்டிடுமே
இங்கே நமது
வீட்டில் இருந்தே
எத்தனை யோனோம்
கண்டிடலாம்
அடுத்த நாட்டில்
நடப்பவை எல்லாம்
அறிந்திட லாமே
வீட்டி லேயே
படிக்கப் பாடம்
இல்லம் வந்து
பயந்தர இதுதான்
உதவிடுமே!
– முனைவர் முரசு நெடுமாறன்