ஓவியம் வரையலாம், வாங்க! தர்பூசணி மீது பறவை
பிஞ்சுகள் அனைவருக்கும் வணக்கம். ஓவியக்கலை பல்வேறு ஆக்கத் திறன்களை ஆவணப்படுத்தவும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாகும். இம்முறை தர்பூசணி மீது அமர்ந்திருக்கும் பறவையை எவ்வாறு ஆங்கில எழுத்துகள் உதவியுடன் வரையலாம் என்பதைக் காணலாம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் D, U, O, மற்றும் W.
‘D’ எழுத்தைப் படுக்கை வசமாக எழுதவும்.
‘U’ எழுத்தைப் பக்கத்தில் காட்டியபடி ‘D’இன் உட்பகுதியில் எழுதவும்.
மீண்டும் ‘U’ எழுத்தைப் படத்தில் காட்டியபடி எழுதவும்.
படத்தில் காட்டியபடி ‘D’ எழுத்தின் உட்பகுதியில் சிறிய வடிவில் நீள் வட்டம் வரைந்த பின்னர் ‘D’இன் மேற்பகுதியில் ‘O’ எழுத்தை எழுதவும்.
‘O’ எழுத்தின் இடது புறத்தில் ‘W’ எழுத்தை எழுதவும்.
‘O’ வின் வலது புறத்தில் ‘D’ எழுத்தை பெரிதாகப் படுக்கை வசமாக எழுதவும் பின்னர் Dஇன் உட்பகுதியில் ‘U’ எழுத்தை
எழுதவும்.
படத்தில் காட்டியுள்ளபடி பறவையின் கண், கால், வால் பகுதிகளை வரைந்து கொள்ளவும்.
வண்ணம் தீட்டி மகிழுங்கள்.