அடேயப்பா…! – 9 : நோசா சென்ஹோரா டா க்ராசா கோட்டை(Nossa Senhora da Graca Fort )
16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்ச்சுகலில் உள்ள எல்வாஸ் நகரில் கட்டப்பட்ட நோசா சென்ஹோரா டா க்ராசா கோட்டை. ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரின் ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. புகழ்பெற்ற இராணுவப் பொறியாளரான ஃபிரான்சிஸ்கோ டி அர்ருடா என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1579 ஆம் ஆண்டு தொடங்கி 1592ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
ஸ்பெயின் எல்லைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள அதன் அமைவிடம் எல்வாஸ் நகரத்தின் பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. அந்தக் கோட்டை, நட்சத்திர வடிவிலான கட்டமைப்பையும், உறுதியான கோட்டைச் சுவர்களையும் கொத்தளங்களையும் கொண்டு வெகு அழகாகத் திகழ்ந்துள்ளது.
அக்கால இராணுவக் கட்டடக் கலையைப் பிரதிபலிப்பதோடு, பீரங்கித் தாக்குதலைத் தாங்கக்கூடிய வகையிலும் கட்டப்பட்டுள்ளது. ஸ்பானிய வாரிசுரிமைப் போர் மற்றும் மூவலந்தீவுப் போர் (Penninsula War) உள்ளிட்ட பல்வேறு மோதல்களில் இந்தக் கோட்டை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததைக் காணலாம். 20ஆம் நூற்றாண்டில், இந்தக் கோட்டை நீக்கப்படுவதற்கு முன்பு இராணுவச் சிறைச்சாலையாகச் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
(இன்னும் ஏராளம் இருக்கு…)