புதுமை: மனித இனத்தின் அடித்த பரிணாமம்?
மனிதர்களாகிய நம்ம கிட்ட உங்க முன்னோர்கள் யாரு? அப்படின்னு கேட்டா நம்ம பாட்டியைச் சொல்லுவோம். நமக்கெல்லாம் மூதாதையர் யார்னு கேட்டா குரங்கின் ஓர் இனம்னு சொல்லுவோம். அதுபோல மனிதர்கள் மட்டும் இல்ல, மற்ற எல்லா உயிரினங்களும் “பரிணாம வளர்ச்சி” அடைஞ்சு இருக்கு என்று அறிவியல் ஆய்வாளர்களும் நாத்திகர்களும் சொல்றாங்க, சரி…! “ஆனா ஏன் இப்ப இருக்கற குரங்குகள் பரிணாம வளர்ச்சி அடையல?” அப்படீன்னு அறிவாளித்தனம்னு நினைச்சுக்கிட்டே நம்மகிட்ட கேப்பாங்க… அவங்களுக்கான பதில் – “எல்லா குரங்குகளும் உயிரினங்களும் தத்தம் ஆயுள் காலத்திற்குள் பரிணாம வளர்ச்சி அடையாது. காலநிலையும், வாழ்வியல் மாற்றமும் தான் எந்த ஓர் உயிரினமும் பரிணாம வளர்ச்சி அடைவதை நிர்ணயம் செய்யும் மனிதர்களும் பல்லாயிரம் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியைச் சந்தித்தே வருகிறார்கள்”என்பது தான்.
இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து 3024 ஆம் ஆண்டில் என்னென்ன நிகழலாம் என்றும், அறிவியலின் துணை கொண்டு மனிதர்கள் எதை யெல்லாம் செய்யக்கூடும் என்றும் சில எதிர்பார்ப்புகளை முன் வைத்துள்ளார். பிரிட்டிஷ் உடற்கூறியல் நிபுணர் ஆலிஸ் ராபர்ட்ஸ். தகவமைப்புக்கு ஏற்ப மாறிக்கிட்டே வருவது தானே பரிணாம வளர்ச்சி.
இந்தம்மா சொல்றதப்பார்த்தா
அவதார் ‘நவி’களைப் பார்த்த
மாதிரியில்ல இருக்கு!
1.முதலில் நாம்ம நம்ம தோலில் இருந்து ஆரம்பிப்போம். பிரிட்டிஷ் ஆய்வாளர் ஆலிஸ் ராபர்ட்ஸ், “கடல்வாழ் உயிரினமான பெரிய கடம்பா (Giant Squid) சூழ்நிலைக்கு ஏற்ப தோலின் நிறத்தை மாற்றிக் கொள்வது போல மனிதர்கள் கூட மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்குதுனு” சொல்றாங்க.
2. அடுத்ததாக இதயம். “மருத்துவத்துல எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் மாரடைப்பாலே (Heart Attack) இன்றும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கு. மாற்று வழி ஏதும் இல்லாததுக்குக் காரணம், நம் இதயத்தில் காரோனரி, ஆர்டரிஸ் இரண்டும் தொடர்பில்லாமல் இருக்கு, ஆனா, நாய்களுக்கு இரண்டும் தொடர்பில் இருப்பதால் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டாலும் மற்றொன்று வேலை செய்யும். அதுபோலவும் மனித இதயம் மாற்றமடையக் கூடும். ஜூராஸிக் வேல்டு படம் எல்லாம் ஞாபகம் வருதா?
3. நமக்கு உணவுக்குழலும், சுவாசக்குழலும் ஒரே பாதையில் இருக்கும், இது சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், பறவைகள் போல நமக்கும் தொண்டைக்குழல் மாற்றம் அடையலாம்.
4. ஈமு கோழிகள் போல வேகமாக ஓடுவதற்கேற்ப ‘குஷனிங்’ போன்ற பாதங்கள் வளர்ச்சி அடையக் கூடும். இதுமட்டும் இல்லாமல் குழந்தை பிறப்பில் இருந்து பல விசயங்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம் அவங்க புத்தகத்தில்.
ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் (Evoluation) நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால், நாம் தான் அதைக் கவனிப்பதில்லை. யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூற்றுப்படி “மனித பரிணாம வளர்ச்சிக்கு கற்பனை, சூழ்நிலை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவைதாம் அதை நோக்கி நகர்த்தும்”. எதுவாக இருந்தாலும் இதுவா நடந்தா நல்லாதான் இருக்கும். இல்ல, அறிவியல் துணைக் கொண்டு மனித இனமே இந்த மாற்றங்களைச் செஞ்சுக்கலாம். ஆனா என்ன, பல நூற்றாண்டுக்கு மேல ஆகும்.<