பிஞ்சு நூல் அறிமுகம்
நூல் பெயர்:
சூரியக் குடும்பம்
ஆசிரியர்: பா.ஸ்ரீகுமார்
வெளியீடு: சுட்டி மீடியா, 8, ரமணி நகர் மெயின் ரோடு, மேற்கு தாம்பரம்,
சென்னை – 600045
பக்கங்கள்: 48; நன்கொடை: ரூ.120/-
சூரியக் குடும்பம் பற்றிய நாம் அறிந்த செய்திகளை விட அறியாத செய்திகள் ஏராளம்; ஒட்டுமொத்த மனிதர்களும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளும் இன்னும் ஏராளம் உண்டு. அவற்றில் சில துளிகளை இந்த நூலில் வழங்கியுள்ளார் ஊடகவியலாளர் பா.ஸ்ரீகுமார்
ஒன்றிரண்டு துளிகள் இந்நூலின் சிறப்பைச் சொல்லும்.
* சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து வான் பொருட்களையும் ஒன்று சேர்த்தால் அது வெறும் 0.2 சதவிகிதம் மட்டுமே இருக்கும். மீதம் 99.8 சதவிகிதமும் சூரியன் மட்டுமே இருக்கும். சுமார் 13 லட்சம் பூமிகளைப் போட்டு நிறைத்தால் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது நம்முடைய சூரியன்.
* சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களுக்கு பல கடவுள்களின் பெயர்கள் வைக்கப்பட்டது போல பூமிக்கு அவ்விதமான பெயர்கள் எதுவும் இல்லை. எர்த் – The Earth என்று ஆங்கிலத்தில் காணப்படுகிறது. அதற்குப் பொருள் தரை (நிலம்).
* சூரியக் குடும்பத்தைத் தாண்டி இருக்கக்கூடிய பகுதியில் மிகவும் குளிர்ச்சி நிறைந்து காணப்படுகிறது. அதில் பல லட்சக்கணக்கான சிறிய அய்ஸ்கட்டிகள் முதல் மிகப்பெரிய கட்டிகள் வரை மிதந்து கொண்டிருக்கின்றன. இதனைக் குப்பியர் பெல்ட் என்று அழைக்கின்றனர்.