திருக்குறள் அரசியல் – பொருட்பால்
அதிகாரம் 60 – குறள் எண்: 595
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
நீரில் பூக்கும் பூக்களின் தண்டுகளின் நீளமானது, அந்த பூக்கள் நிற்கும் நீரின் ஆழத்தின் அளவை ஒத்திருக்கும்; அதுபோல மக்களின் உயர்ந்த தன்மையானது, அவர்கள் கொண்டிருக்கும் ஊக்கத்தின் அளவை ஒத்து இருக்கும்
உரை:
டாக்டர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன் எம்.ஏ., டி.லிட்.