கொட்டும் மழையில் நனையாதே
மழையின் அழகை ரசிக்கலாம் – நாம்
குளிர்ந்த காற்றில் மகிழலாம்!
உழுவார் உழவர் செழிக்காலம் – பசி
உலகை விட்டே ஓடலாம்!
ஆற்றில் வெள்ளம் பெருகுமே — உயர்
அணைகள் நிறைந்து வழியுமே!
ஊற்று நீரும் சுரக்குமே — நல்
ஊருணி கிணறும் நிறையுமே!
பள்ளி செல்ல வேண்டுமே — நாம்
பாடம் படிக்க வேண்டுமே!
துள்ளி மழையில் குதித்தாலோ — நம்மைத்
துயரம் தொற்றிக் கொள்ளுமே!
கொட்டும் மழையில் நனையாதே — கும்
மாளம் போட நினையாதே
சட்டெனக் காய்ச்சல் வந்திடுமே — சேரும்
சளியால் இருமல் வாட்டிடுமே!
மழையில் நனைய வேண்டாமே — நாம்
மருந்தும் குடிக்க வேண்டாமே!
அழைப்பார் அம்மா ஓடிடுவாய் — என்றும்
அன்னையின் சொல்லைக் கேட்டிடுவாய்!!
– -ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை.