ஹாப்பி பர்த்டே தாத்தா!?
2.12.2024 அன்று நடைபெற்றது இந்தச் சந்திப்பு ஆசிரியர் தாத்தாவிற்கும் அறிவுக்கரசிக்கும் இடையே நடந்த உரையாடல்:-
அறிவுக்கரசி: ‘ஹாப்பி பர்த்டே’ தாத்தா!
ஆசிரியர் தாத்தா: ஏன் உங்களுக்கு தமிழ் தெரியாதா?
தமிழ்லயே சொல்லுங்க!
அறிவுக்கரசி: பிறந்தநாள் வாழ்த்துகள் தாத்தா!
ஆசிரியர் தாத்தா: நன்றி.
உரையாடல் முடிந்த பிறகு ஆசிரியர் தாத்தா தனக்குக் கொடுத்த ஆப்பிள் பழத்தைப் பெற்றுக் கொண்டு பெரியார் உணவகம் திரும்பிய அறிவுக்கரசி, அங்கே “பசிக்குது, ஏதாவது உதவி பண்ணுங்கம்மா” என்று கேட்டுக் கொண்டிருந்த ஒருவரிடம் அந்த ஆப்பிள் பழத்தைக் கொடுத்து விட்டதாக நம்மிடம் தெரிவித்தார்.