‘பெரியார் பிஞ்சு’ இதழுக்கு அமைச்சரின் பாராட்டும், நமது நன்றியும்!
கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழில் தொடர்ந்து கோமாளி மாமா சொன்ன கதையை எழுதி வருபவன் நான் என்பதால் உங்களைப்போலவே நானும் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். எந்த நோக்கத்திற்காக இக் கதைகள் எழுதப்பட்டதோ, அந்த நோக்கம் வெற்றி பெற அரசும், அமைச்சர் அவர்களும் ஒத்துழைப்பு நல்கி இருப்பது அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதற்கு முழு முதற் காரணமாக இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்றென்றும்!
தொய்வின்றி தொடர்ந்து அடுத்த தலைமுறையின் நல்வளர்ச்சிக்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.
– மு.கலைவாணன்
‘பெரியார் பிஞ்சு’ இதழையும், வெளியீடுகளையும் பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு நன்றி!
– பொறுப்பாசிரியர்