கற்றோம் : பூலே, சாகு, அம்பேத்கர் மண்ணிலிருந்து பெரியார் திடலுக்கு வந்த பிஞ்சு!
மகாராட்டிரா மாநிலம் புனேவில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலாவிற்காகத் தமிழநாட்டுக்கு வந்தோம்.
எங்கள் குடும்பம் சமூகநீதிக்காகப் பாடுபடும் தலைவர்களின் கொள்கைகளைப் பரப்பும் குடும்பமாகும்.
மகாத்மா ஜோதிபா புலே, சமூகநீதிப்போராளி சாகு மகராஜ், பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோர் ஆகியோர் பிறந்த மகாராட்டிர மண்ணில் இருந்து வந்த எங்களுக்குத் தந்தை பெரியார் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் சென்னை வந்த பிறகு மேலும் அதிகரித்தது. குடும்பத்தோடு நாங்கள் பெரியார் திடலுக்குச் சென்றோம்.
முதலில், பெரியார் திடலில் உள்ள அருங்காட்சியத்தை முழுமையாகப் பார்த்து அங்குள்ள ஒவ்வொரு படங்கள் குறித்த விளக்கத்தையும் வரலாற்றுப் பின்னணியினையும் கேட்டறிந்தோம். தந்தை பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினோம்.
பின்னர் நூலகத்திற்குச் சென்று ‘குடிஅரசு’ இதழ்கள் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த ‘ரிவோல்ட்’ இதழின் பழைய பிரதிகளைப் பார்த்து வியந்தோம்.
தந்தை பெரியார் குறித்து நாங்கள் கேள்விப்பட்டதை விட, நேரில் வந்து கண்டபோது மேலும் அதிகம் தெரிந்துகொண்டோம்.
இறுதியாக நூலகருக்கும் மொழிபெயர்ப் பாளருக்கும் நன்றி தெரிவித்தோம். தந்தை பெரியார் குறித்து நாங்கள் தெரிந்துகொண்டதை எங்கள் மாநிலத்திற்குச் சென்று சக மாணவர்களோடு உரையாடுவோம்.
நன்றி!
– அசோக் ரூபாகடே,
11 ஆம் வகுப்பு,
பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளுடன்.