2025 வருக… வருகவே…
புதுசா ஆண்டு பொறந்தாச்சு
காலண்டர் ஒண்ணு கிடைச்சாச்சு
தோழிகள் வாழ்த்தும் வந்தாச்சு
மனசும் மகிழ்வாய் நிறைஞ்சாச்சு
இன்னும் நல்லா படிக்கணும்னு
புத்தாண்டு உறுதி எடுத்தாச்சு
நல்ல பிள்ளைன்னு பெயரெடுக்க
மனதில் உறுதி வகுத்தாச்சு
பெரியார் சொல்லைக் கேட்கணும்னு
ஓடி ஆடி என்னுடம்பைக்
காக்க ஆசைப் பட்டாச்சு!
அடுத்த ஆண்டு பிறப்பதற்குள்
நினைத்தை முடிக்கத் முடிக்கத் துணிஞ்சாச்சு!
– அ.யாழினிபர்வதம்,
சென்னை.