பிஞ்சு வாசகர் கடிதம்:தொழுநோய் சுவாசத்தால் பரவும்!
அய்யா,
பெரியார் பிஞ்சு (நவம்பர் 2024) இதழில் இடம்பெற்றுள்ள நூல் அறிமுகம் பகுதியில் தொழுநோய் தொட்டால் பரவாது என்று இருக்கிறது. தொட்டால் பரவாது எனினும், சுவாசம் வழியாக (droplet infection) பரவக் கூடியது என்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அப்படி பரவக் கூடியது என்பதால் தான் அவர்களைத் தனிமைப்படுத்தி வைக்கிறார்கள்.நோய் முற்றிய நிலையில் பரவும் வாய்ப்பு குறைவு. எனினும் அவர்களைச் சிகிச்சைக்காக அணுகும் போதும் தகுந்த பாதுகாப்புடன் தான் அணுகி இருக்கிறோம்.
– தேன்மொழி