கவிதைகள்
மூன்று எலிகள்
மூன்று எலிகள் ஓடின
வீட்டின் மூலையில் கூடின
வெண்ணெய்க் கட்டியைக் கண்டன
விரும்பி உண்ணப் பார்த்தன
மெல்ல மெல்ல நெருங்கின
விரைந்து உண்ணக் கவ்வின
மியாவ் மாமா சீறினார்
மூலைக் கொன்றாய்ப் பறந்தன!
– முனைவர் முரசு நெடுமாறன்,
மலேசியா.
ஆழமான மலைப் பள்ளம்
உலகிலேயே இயற்கையாய் அமைந்த பெரிய, ஆழமான சிங்க் ஹோல் என்று சொல்லப்படும் மலைப் பள்ளம் (சுற்றளவு 537 மீட்டர், குழியின் ஆழம் 662 மீட்டர்) சீனாவில் உள்ளது. அதன் கண்கொள்ளாக் காட்சி இது!
இந்த சியஜாய் டியாகிங், சீனாவின் நடுப்பகுதியில் பெஞ்சி என்ற இடத்தில் இருக்கிறது. இது மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குகைகள் மற்றும் ஆறுகள் சிதைந்து இந்து மலைப் பள்ளம் உருவாகி இருக்கிறது என புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மலைப்பள்ளத்தை இயற்கையின் விந்தை எனவும், இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
– சுந்தர்சன் ராஜசேகர்