ஓவியம் வரையலாம், வாங்க! குரங்கு
குரங்கு பாலூட்டி விலங்கு. குரங்குகளில் பல வகைகள் உண்டு. அவை பழங்கள்,
இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூச்சிகள் போன்றவற்றை உண்ணுகின்றன. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது. முகத்தை மறைத்து அணியப்படும் அணிகலனே முகமூடியாகும். முகமூடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்து வருகின்றன. தொடக்க காலத்தில் முகமூடியை போர்க்களத்தில் தற்காப்புக் கவசமாகப் பயன்படுத்தியுள்ளனர். நிகழ்காலத்தில் கலை நிகழ்ச்சிகளில் பலவகையான முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் அட்டையைப் பயன்படுத்தி குரங்கு முகமூடியை எவ்வாறு ஆங்கில எழுத்து உதவியுடன் வரையலாம் என்பதைக் காணலாம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் C, D, M மற்றும் U
வாங்க, வரையலாம்!
‘C’ எழுத்தை எழுதவும்.
‘C’யை ஒட்டியவாறு ‘D’ எழுத்தை எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு m எழுத்தை, படத்தில் காட்டியவாறு எழுதவும்.
‘m’ எழுத்தை நீள் வட்டத்தோடு படத்தில் காட்டியபடி இணைத்த பின் ‘m’ ன் உட்பகுதியில் ‘C’ எழுத்தை, தலைகீழாக எழுதவும்.
‘C’ ன் அடிப்பகுதியில் D எழுத்தைப் படுக்கை வசமாக எழுதிய பின்பு Dஇன் உட்பகுதியில் ‘U’ எழுத்தை எழுதவும்.
நீள் வட்டத்தின் உட்பகுதியில் படத்தில் காட்டியபடி மூக்கையும், வாயையும் வரையவும்.
mஇன் இடதுபுறத்தில் பெரியதும், சிறியதுமாய் ‘C’ எழுத்தை எழுதவும். mஇன் வலதுபுறத்தில் ‘C’ எழுத்தை படத்தில் காட்டியபடி வரையவும்.
நீள் வட்டத்தின் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு ‘C’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
‘C’ எழுத்தைச் சுற்றிலும் வளைவு கோடு கொண்டு படத்தில் காட்டியபடி வரையவும்.
தேவையற்ற கோட்டினை அழித்துவிட்டால் உங்களுக்கு அழகான குரங்கின் முகமூடி கிடைத்துவிடும்.
வண்ணம் தீட்டுங்கள்.
படத்தில் காட்டியபடி சுற்றிலும் அழகாக, கவனமாகக் கத்தரித்து, நூல் கோத்து முகமூடி ஆக்கிக் கொள்ளுங்கள்.