சுவடு : அன்று ஆடிய ஆட்டம் என்ன?

கி.மு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்களின் பண்பாட்டுச் சின்னங்களை கீழடி அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்துள்ளது. உலகின் நாகரீகமடைந்த முதல் இனம் தமிழினம்தான் என்ற பெருமையை நிரூபித்திருக்கிறது.
இன்று கிரிக்கெட் மோகத்தில் மூழ்கிய பிஞ்சுகளே! அன்று நம் ஆதிகுழந்தைகள் விளையாடிய விளையாட்டுக்கள் பற்றி தெரிந்து கொள்வோமா!
இன்றும் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான சில்லு விளையாட்டு அக்காலத்திலும் விளையாடப்பட்டிருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் கீழடி அகழ்வாய்வில் 601 வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சில்லு விளையாட்டு பாண்டி என்ற பெயரில் இன்றும் மதுரை பகுதிகளில் விளையாடப்படுகிறது. தாயம் விளையாட்டுக்கு பயன்படும் பகடைக்காய், குழந்தைகள் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் விளையாட்டு வண்டி
பொம்மைக்குரிய சக்கரம், இன்றைய சதுரங்கம் (செஸ்) போன்ற ஒரு விளையாட்டுக்கு பயன்படும் 80 ஆட்டக்காய்களும் கிடைத்துள்ளன. இவை யாவும் சுடுமண்ணாலானவை.
– அண்ணா அன்பழகன்,
சென்னை.