ராஜ நாகம் ஏன் தாக்குகிறது?
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்லிவைத்துள்ளார்கள்.ஆனால், சீனா மக்கள் பாம்புகளை கண்டந்துண்டமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள்.உலகில் உள்ள பாம்புகளில் பெரும்பாலும் விஷமற்றவை அல்லது விஷம் குறைந்தவைதான். ஒரு சில பாம்புகள்தான் கொடும் விஷம் உள்ளவை. அவற்றுள் ஒன்று ராஜ நாகம் என்னும் பாம்பு. ஆனால்,இந்த ராஜ நாகமும் கூட தன் உயிருக்கு ஆபத்து என்ற நிலை வந்தால்தான் மனிதர் களையோ அல்லது மற்ற உயிரினங் களையோ தாக்குகிறதாம். இந்த நாகப் பாம்பு ஒரு முறை உமிழும் விஷம் 6 மனிதர்களை அல்லது ஒரு யானையைக் கொல்லும் அளவுக்கு மிகவும் கொடியது. 18 அடி நீளம் வரையுள்ள இந்த ராஜ நாகம் உலகில் உள்ள கொடிய விஷமுடைய பாம்புகளில் ஒன்று. இந்தியக் காடுகளில் இவை உள்ளன.
மனிதர்கள் வாழும் பகுதிக்கு சில சமயம் வந்துவிடும் இவைகளைப் பிடித்து மீண்டும் காட்டுக்குள் விடும் பணியை, இந்தக் குட்டி ராஜ நாகத்துடன் விளையாடும்கவுரி ஷங்கர் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை 200 க்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளாராம்.
இதுதான் உலகிலேயே மிகச் சிறிய ஓணான். தென் கிழக்கு ஆப்பிரிகாவில் உள்ள மடகாஸ்கர் நாட்டின் அடர்ந்த காடுகளில் வாழும் இந்த ஓணானின் நீளம் 2.5 செ.மீ.தான். அண்மையில் தான் இப்படி ஒரு மிகச் சிறிய ஊர்வன இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.