சிரிப்பு
வாத்தியார்: நடத்திமுடிச்ச பாடத்துல ஏதாச்சும் தீராத சந்தேகம் இருந்தா கேட்கலாம்.
பையன்: இராமனை வீரனாக கம்பர் சித்தரித்திருப்பதாக சொன்னீங்க! ஆனா சுக்கிரீவன் பேச்சைக் கேட்டு வாலியை மறைந்து நின்று கொன்றான் என்றும் சொல்லுறீங்க! வீரன் எப்படி மறைந்து நின்று கொல்லுவான் சார்?
வாத்தியார்: ??
சோமு: ஏன் இந்த நிகழ்ச்சிக்கு பல் டாக்டர்தான் தலைமை தாங்கி நடத்தணும்னு நம்ம தலைவர் அடம் பிடிக்கிறார்?
ராமு: இது ஒரு பல்சுவை நிகழ்ச்சியாச்சே அதான்!
சோமு: ??
-_ கல்மடுகன்