திருக்குறள் அரசியல் – பொருட்பால்

அதிகாரம் 43 – குறள் எண்: 427
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
எதிர்காலத்தில் ஆகக்கூடியது எது என்பதை முன்கூட்டியே அறியக்கூடிய வல்லமை பெற்றவர்களே அறிவுடையவர்கள் ஆவார்கள். அவ்வாறு முன் கூட்டியே அறியமாட்டாதவர்கள் அறிவில்லாதவர்கள் ஆவார்கள்.
உரை:
டாக்டர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன்
எம்.ஏ., டி.லிட்.