ஓவியம்

அம்மா அப்பா அக்கா தான்
அழகாய் நிற்க வரைந்தேனே!
என்னைத் தூக்கிய அப்பாவோ
என்னில் உயரம் குறைந்தாரே!
பாசம் கொண்ட அம்மாவோ
பளிச்செனப் படத்தில் தெரிந்தாரே!
அம்மா அருகில் அக்காவும்
அன்பாய்ச் சிரித்து நின்றாளே!
நான் வளர்த்த நாய்க்குட்டி
நன்றாய் வாலை ஆட்டியதே!
வரைந்த ஓவியம் அழகென்றேன்
வாங்கிய பரிசு நிறைவென்பேன்!
– கவிஞர் விண்மீன்