உலகின் மிகப் பெரிய கப்பல்
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இக்கப்பல் உலகின் மிகப் பெரிய கப்பல் இது. பின்லாந்து நாட்டின் தூர்கு தளத்தில் இக்கப்பல் கட்டப்பட்டது. இதன் நீளம் 360 மீட்டர். இதில் 16 அடுக்கு மாடிகள் அதாவது நம் சென்னை எல்.அய்.ஜி. கட்டடத்தை விட இரண்டு அடுக்குகள் கூட உள்ளது. இதில் 4 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப்பந்து, கோல்ப் விளையாட்டுத் தளங்கள், கேளிக்கை விடுதிகள், ஒரே நேரத்தில 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளன.
நம் இந்தியாவின் மிகப் பெரிய கப்பல் அய்.என்.எஸ். ஜலாஷ்வா (இந்தயக் கப்பற்படை கப்பல்) 173.7 மீட்டர் நீளம் கொண்டது. இதில் 1000 பேர் பயணம் செய்யலாம். அமெரிக்கக் கப்பலின் பெயர் ராயல் கரீபியன் கப்பல்.
நம் நாடு இதுபோல் பெரிய கப்பலை உருவாக்க இன்னும் எத்தனைக் காலம் ஆகும்? பதில் சொல்ல முடியாத கேள்வி இது.
– ராஜம்