அறிவியல்
முதல் வான்வழி ஒளிப்படம் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பறக்கும் பலூனிலிருந்து எடுக்கப்பட்டது.
பனி என்பது உறைந்த மழைநீரல்ல. இடைப்பட்ட நிலையில் நீராக மாறாமல், நீராவியிலிருந்து பனிப்பொரிகள் நேரடியாக பனியாக மாறுகின்றன.
வானத்திலிருந்து விழும் எரிபொருள் களினால் (பெரும்பாலும் அவை தூசுகளாக இருக்கும்) பூமியின் எடை ஆண்டுதோறும் 100,000 பவுண்டுகள் கூடிக் கொண்டே வருகிறது.
- கடல் நீரினுள் 400 மீட்டருக்கு மேல் சூரிய ஒளியினால் ஊடுருவிச் செல்ல முடியாது.
- கிரீன்லாந்து தீவின் பெரும்பகுதி பனிக் கட்டியாலும், பனிப்பொழிவாலும் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் மூடப்பட்டே இருப்பதால், அங்கு மிகக் குறைந்த அளவே பசுமை காணப்படுகிறது.
- ஒரு மைல் நீளத்திற்கு ஒளிரும் ஒரு மின்னல்கீற்று பத்து லட்சம் மின்விளக்குகளை ஒளிவீசச் செய்யும் மின் ஆற்றலைக் கொண்டது.
வைரம் அமிலத்தில் கரையக் கூடியது அல்ல. அதிக அளவு வெப்பம் ஒன்றினால் மட்டுமே வைரத்தை அழிக்க முடியும்.
ஒரு துளி நீரில் ஒரு நூறு கோடி நூறுகோடி (ஒரு பில்லியன் பில்லியன்) அணுக்கள் உள்ளன.
மரத்தைக் கொத்தும்போது, மணிக்கு 10 மைல் வேகத்தில் தனது அலகை முன்னுக்கும் பின்னுக்குமாக மரங்கொத்திப் பறவை நகர்த்துகிறது.
ஒரு பவுண்டு தேனடைக்கான தேனை 20 லட்சம் மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்க வேண்டும்
தன் உடலின் நீளத்தைப் போன்று 12,000 மடங்கு நீளம் கொண்ட பட்டு நூலை ஒரு பட்டுப்பூச்சியின் கூட்டுப் புழு தருகிறது. 15 மைல் நீளம் கொண்ட நூலை ஒரு ஆறடி உயரம் கொண்ட மனிதர் நூற்பதுடன் ஒப்பிட இயன்றது இது.
அறிவியல் முறைப்படி அளந்து பார்த்தால், ஒரு நடுத்தர அளவுள்ள சுறா மீனின் பல் இரும்பைப் போன்ற உறுதி படைத்ததாக இருக்கும்.
வயது வந்த ஒருவரின் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் 60,000 மைல் நீளமுள்ள குழாய்கள் இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.
- மனிதரின் நீரிழிவு நோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் இன்சுலின் பன்றிகள் மற்றும் ஆடுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இவற்றில் சுரக்கும் இன்சுலின் மனிதர் உடலில் சுரக்கும் இன்சுலினைப் போலவே இருப்பதும், உடலின் சர்க்கரை அளவைச் சமப்படுத்தும் அதே ஆற்றலைக் கொண்டதுமாகும்.
- மனிதரின் உணவுப் பாதையில் 3.5 கோடி செரிமான சுரப்பிகள் உள்ளன.