உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் காணப்படும் தாவர வகைகள்:-
சிற்றினங்கள் – 45,000
பூக்கும் தாவரங்கள் – 15,000
பாசியினங்கள் – 1676
படர் தாவரங்கள் – 1940
பூஞ்சைகள் – 12,480
திறந்த விதை தாவரங்கள் – 64
பிரேயோபைட்டுகள் – 2843
டெரிடோஃபைட்டுகள் – 1012
க.கார்த்திகா, 9ஆம் வகுப்பு, அ பிரிவு,
நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை
இந்தியாவில் கரும்பு பயிராகும் இடங்கள்
நெல் பயிரைப் போன்றே கரும்பும் நன்செய் வகை. வண்டல் மண், கரிசல் மண் பூமியிலும் வளரும். வெப்பம் அதிகம் இருந்தால் கரும்பின் தரம் உயரும்.
தீபகற்ப இந்தியாவில் டெல்டாப் பகுதிகளுக்கு மேற்கில் கரும்பை பயிரிடுகின்றனர். தென் குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது.
புறத் தீபகற்ப இந்தியாவில் கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளத்திலும் கரும்பு அதிகமாக பயிராகிறது.
உத்திரப்பிரதேசம் இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் என்றும் அழைக்கப்படுகிறது.
மு.சோனைவேல்,
நான்காம் வகுப்பு ஈ பிரிவு
கவிதை மாணவர்களுக்கு…
கடலைப் பருக முடியாதென்று
தெரிந்தும் ஓய்வதில்லை சூரியன்
கரையைக் கடக்க முடியாதென்று
தெரிந்தும் ஓய்வதில்லை அலைகள்
முயன்றால் வெற்றி நமக்கென்று
தெரிந்தும் நீ அதனை
தொடங்கவே இல்லையே ஏன்?
நன்றி!
ஏ.பிரட்டி ஏஞ்சல், ஏழாம் வகுப்பு ஆ பிரிவு,
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி, திருச்சி – 21