மண்ணில்…
உயர்ந்து நிமிர்ந்து
மங்கோலிய அரசை நிறுவிய செங்கிஸ்கான் குதிரையில் அமர்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 250 டன்கள் துருப் பிடிக்காத இரும்பால் வடிவமைக்கப்பட்டது. 132 அடி உயரமுள்ள இச்சிலை, மங்கோலியாவின் தலைநகரான உல்லான்பட்டோர் நகருக்கு 54 கி.மீ. கிழக்கே உள்ள சோஞ்ஜின் போல்டோக் நகரின் அருகே ஓடும் துள் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதியைப் பார்த்தவாறு அமைந்துள்ள இச்சிலையை டி.எர்டெம்பிலக் மற்றும் ஜெ.என்க்ஜெர்கர் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
வளைந்து நெளிந்து
பாம்புபோல வளைந்து செல்லும் இது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம்தான். அமெரிக்கா சிகாகோவில் கொலம்பஸ் டிரைவ் சாலையின் குறுக்கே 2004ல் கட்டப்பட்ட இந்த நடைமேம்பாலம் இரும்பு, சிமெண்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. நடக்கும் பகுதி மரத்தல் அமைந்துள்ளது. பொறியாளர் ஃப்ரான்க் கெரி 20 அடி அகலமும் 935 அடி நீளமும் கொண்ட இந்தப் பாலத்தை வடிவமைத்தவர்.