உலக நாடுகள் ஆங்குயிலா (ANGUILLA)
அமைவிடம்: கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு
பரப்பளவு : 35 சதுர கிலோ மீட்டர்கள்
தலைநகரம்: தி வேளி
மக்கள் தொகை: 15,423 (ஜூலை 2011 கணக்கெடுப்பின்படி)29 விழுக்காட்டினர் ஆங்கிலிகன் கிறித்துவர்கள்,24 விழுக்காட்டினர் புராட்டஸ்டண்ட் கிறித்துவம் சார்ந்த மெதோடிஸ்டுகள்,4 விழுக்காட்டினர் எந்த மதத்தையும்தோர்,எஞ்சியோர் ரோமன் கத்தோலிக்கர்,பாப்டிசம்,பெந்தகோஸ்ட்,செவந்த்டே அன்வண்டிஸ் உள்ளிட்ட பிற மதத்தினர்.
ஆட்சி நிர்வாகம்: இங்கிலாந்து நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட அயல் நாடு நாடாளுமன்ற பிரதிநிதித்துவ ஜனநாயக முறையில் இயங்குகிறது.முதல் அமைச்சரே ஆட்சித் தலைவர் ஆவார்.ஆளுநர் நிர்வாகத் தலைவர் ஆவார்.
ஆட்சி மொழி: ஆங்கிலம்
தொழில்: சுற்றுலா முக்கியத் தொழிலாக உள்ளது.இன்னொரு தொழில் மீன் பிடித்தல்
வளங்கள்: பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளாக இருப்பதால் வேறு வளங்கள் இல்லை.
நாணயம்: கிழக்குக் கரீபியன் டாலர் மற்றும் அமெரிக்க டாலர்கள்.